கோடம்பாக்கம் டஸ்கி பியூட்டி இவர் தானாமே...எதுக்கு இந்த பட்டம் தெரியுமா ?

சென்னை : கோடம்பாக்கத்தில் டாப் நடிகர் ஒருவருக்கு டஸ்கி பியூட்டி என பட்டம் வழங்கப்பட்டுள்ளதாம். இதற்கு என்ன காரணம் என்பதை கேட்டு மற்ற நடிகைகள் அசந்து போய் உள்ளனர். இப்படி கூடவா பட்டம் குடுப்பார்கள் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அதிகம் நடித்து வருகின்றனர். இந்த மூவரில், இந்த வகை கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரே நேரத்தில் பல படங்களி்ல் கமிட் ஆகி உள்ளார்.

இத்தனை படங்களில் நடிக்கிறாரா

இத்தனை படங்களில் நடிக்கிறாரா

நீதான அவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது தமிழில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் புலிமட படத்தில் நடிக்கிறார். லேட்டஸ்ட்டாக லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் படத்தில் அவர் கமிட் ஆகி இருக்கிறார்.

கோடம்பாக்கம் டஸ்கி பியூட்டி

கோடம்பாக்கம் டஸ்கி பியூட்டி

அவருடன் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. பல திருப்பங்கள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

என்னது அரவிந்த்சாமி ரோலா

என்னது அரவிந்த்சாமி ரோலா

இந்த படத்தில் வடசென்னையை சேர்ந்த சேல்ஸ்கேர்ள் ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாராம். அதே சமயம் இது தனி ஒருவன் அரவிந்த்சாமி போன்ற கேரக்டராம் ஆனால் பாசிடிவ் ரோலாம். இவரது கேரக்டர் பற்றிய இந்த தகவல்கள் படம் பற்றியும், ஐஸ்வர்யா ராஜேஷின் ரோல் பற்றியும் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இந்த படமும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு மிகப் பெரிய பெயரை வாங்கித் தரும் என நம்பப்படுகிறது.

Recommended Video

அஜித் பட தயாரிப்பாளர் S Aishwarya Interview | Vedalam | Tamil Filmibeat
வேற லெவல் ஐஸ்வர்யா

வேற லெவல் ஐஸ்வர்யா

நாயகிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா, பூமிகா போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன. இவருக்கு ஒரே சமயத்தில் பல பட வாய்ப்புக்கள் கிடைக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படம் சமீபத்தில் சீன மொழியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X