»   »  இது இதுக்கு தான் நான் கோஹ்லியை பற்றி பேசுவதே இல்லை: சீறும் அனுஷ்கா

இது இதுக்கு தான் நான் கோஹ்லியை பற்றி பேசுவதே இல்லை: சீறும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கோஹ்லி பற்றி செய்தியாளர்களிடம் போசாததற்கான காரணத்தை பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் காதலித்து வந்தார்கள். திடீர் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டார்கள். அதன் பிறகு கோஹ்லி படாதபாடு பட்டு அனுஷ்காவுடன் மீண்டும் சேர்ந்துவிட்டார்.

காதல் பற்றி அனுஷ்கா தற்போது யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை. இந்நிலையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காதல்

காதல்

நான் ஏன் காதல் பற்றி பேசுவது இல்லை என்பதற்கான காரணத்தை தற்போது கூறுகிறேன். நான் முன்பு என் காதல் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசினேன். ஆனால் மக்கள் அதை சரியான முறையில் கையாளவில்லை.

அனுஷ்கா

அனுஷ்கா

மக்களுக்கு அடுத்தவர்களை பற்றி பேசுவதில் தான் ஆர்வம். ஓ, அவர்கள் இருவரும் சந்தித்தார்களாம். காதலித்தால் சந்திக்காமலா இருப்பார்கள்? ஒரு காதல் ஜோடி சந்திப்பது எப்படி பெரிய செய்தியாகிறது? இது எல்லாம் ரொம்ப ஓவர்.

படங்கள்

படங்கள்

ஒரு நடிகையாக நான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். என் படங்கள் ரிலீஸாகின்றன. ஆனால் தலைப்புச் செய்தியில் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மட்டுமே செய்திகள் வெளியாகின்றன.

வேலையை பாருங்க

வேலையை பாருங்க

படத்தை பற்றிய செய்தியாளர் சந்திப்புக்கு வந்தால் அதை விட்டுவிட்டு என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியே கேள்வி கேட்கப்படுகிறது. கொஞ்சமாவது முன்னேறுங்க. வெளிநாடுகளில் எல்லாம் நடிகர், நடிகைகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்ற பேசுவது இல்லை.

English summary
Bollywood actress Anushka Sharma has revealed the reason as to why she doesn't talk about her boy friend Kohli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil