»   »  சும்மா சும்மா கடுப்பேத்திய தீபிகா: சத்தமே இல்லாமல் ஆப்பு வைத்த சல்மான் கான்

சும்மா சும்மா கடுப்பேத்திய தீபிகா: சத்தமே இல்லாமல் ஆப்பு வைத்த சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சுல்தானை அடுத்து தான் நடிக்கும் ட்யூப்லைட் படத்தில் தீபிகா படுகோனேவை ஹீரோயினாக போடக் கூடாது என்று சல்மான் கான் கறாராக கூறிவிட்டாராம்.

சல்மான் கான் நடிப்பில் வெளியான சுல்தான் படம் ரூ. 550 கோடி வசூல் செய்துள்ளது. சல்மானுடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் போட்டா போட்டி போடுகிறார்கள். இந்நிலையில் தீபிகா படுகோனே மட்டும் சல்மான் படத்தில் நடிக்க வரும் வாய்ப்புகளை தொடர்ந்து தட்டிக்கழிக்கிறார்.

சல்மான் படத்தில் நடிக்க வரும் வாய்ப்பை மறுத்தாலும் சல்லுவுடன் நடிக்க ஆசைப்படுவதாக மட்டும் கூறி வருகிறார்.

ட்யூப்லைட்

ட்யூப்லைட்

சல்மான் கானை வைத்து பஜ்ரங்கி பாய்ஜான் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் கபீர் கான். தற்போது கபீர் சல்மானை வைத்து ட்யூப்லைட் என்ற படத்தை இயக்க உள்ளார்.

தீபிகா

தீபிகா

கபீர் ட்யூப்லைட் படத்தின் ஹீரோயினாக தீபிகாவை ஒப்பந்தம் செய்ய நினைத்தார். தீபிகாவோ படத்தில் எனக்கு சல்மானுக்கு நிகராக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வேண்டும். கதையை மாற்றிவிட்டு வாங்க பார்க்கலாம் என்றாராம்.

சல்மான்

சல்மான்

ட்யூப்லைட் படத்தின் ஹீரோயினாக தீபிகாவை நடிக்க வைக்கலாம் என விரும்புகிறேன் என்று கபீர் சல்மானிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சல்மானோ, தீபிகா வேண்டாம், யாராவது சீன நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.

சீன நடிகை

சீன நடிகை

சல்மான் கான் பேச்சுக்கு மறுப்பேது. கபீர் கான் அலைந்து திரிந்து ஒரு சீன நடிகையை சல்மானுக்கு ஜோடியாக்கிவிட்டார். முன்னதாக பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் கபீர் கத்ரீனா கைஃபை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் சல்மானோ கத்ரீனா வேண்டாம் கரீனா கபூரை நடிக்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

சீன நடிகை ஏன்?

சீன நடிகை ஏன்?

1962ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போரை அடிப்படையாக வைத்து ட்யூப்லைட் படம் எடுக்கப்படுகிறது. அதனால் தான் சீன நடிகையை ஹீரோயினாக்குமாறு கூறினாராம் சல்மான் கான்.

English summary
Salman Khan has said No to Deepika Padukone for his upcoming film Tubelight. Normally, it is Deepika who says No to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil