»   »  சிம்பு ஹீரோயினை தனுஷுக்கு ஜோடியாக்கிய மச்சினி சவுந்தர்யா

சிம்பு ஹீரோயினை தனுஷுக்கு ஜோடியாக்கிய மச்சினி சவுந்தர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் 3 ஹீரோயின்களாம்.

இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படமான கோச்சடையானை எடுத்தவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். அவர் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் தனுஷ் தான் ஹீரோ. தனுஷுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம்.

காஜல்

காஜல்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். காஜல் ஏற்கனவே தனுஷுடன் சேர்ந்து மாரி படத்தில் நடித்தவர்.

மஞ்சிமா

மஞ்சிமா

மஞ்சிமா மோகன் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தவர். சிம்புவை அடுத்து அவரின் நண்பன் தனுஷுக்கு ஜோடியாகியுள்ளார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

சவுந்தர்யா படத்தில் மூன்று ஹீரோயின்களாம். மூன்றாவது ஹீரோயினாக பாலிவுட் நடிகை சோனம் கபூரை நடிக்க வைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் தமிழ் படத்தில் நடிக்க விரும்பாததால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய உள்ளார்களாம்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் தான் இயக்கி வரும் பவர் பாண்டி படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த பட வேலைகளை முடித்துவிட்டு இந்த மாத இறுதியில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

English summary
Kajal Agarwal and Manjima Mohan are all set to act in Dhanush starrer “Nilavakku Enmel Ennadi Kobam” being directed by Soundarya Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil