»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெயரிலேயே திரி இருப்பதாலோ என்னவே இவரைப் பார்த்தாலே பத்திக் கொள்கிறது மனசு.

முன்னாள் மிஸ் மெட்ராசான திரிஷா ரொம்ப வெவரமானவராகத்தான் இருக்கிறார். இவர் நடித்து இன்னும் ஒரு படம் கூடவரவில்லை. அதற்குள் இவர் கை வசம் நான்கு படங்கள். இவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டியே நடந்துவருகிறது. ஏனாம்?

திரிஷா இப்போது கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் அள்ளி வீசியிருக்கும்கவர்ச்சியைக் கேள்விப்பட்டு பல தயாரிப்பாளர்கள் இந்த சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துவிட்டார்களாம்.

அங்கேயே வைத்து அவரை அடுத்த படத்துக்கு புக் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இப்படிக் தானாக வந்து சிக்கிய 4படங்களிலும் கேமராவே இளகிவிடும் அளவுக்கு கவர்ச்சித் தீயை பரப்பி வருகிறாராம்.

ஏம்மா இப்படி.. இது நியாயமா என்று அவரிடம் அப்பாவியாகக் கேட்டோம்.

கவர்ச்சியாக நடித்தால் என்ன தப்பு என்று டைரக்டாய் பதில் சொன்ன திரிஷா, தேவைப்பட்டால் மும்தாஜ் லெவலுக்கு இறங்கவும்நான் நெரடி. எனக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை. நீங்க ரெடியா என்றார்.

நாம் பதில் சொல்வதற்கு வாய்ப்பே தராமல் தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் மட்டும்தானா பெண்கள் கவர்ச்சியாகஇருக்கிறார்களா? பல அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் அணியும் உடைகளைப் பார்த்திருக்கிறீர்களா? கல்லூரிப்பெண்கள் அணியும் உடைகள் எப்படியெல்லாம் இருக்கின்ற தெரியுமா? இதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா? கேள்வி கேட்கமாட்டீகளா?

அட, வீட்டு விஷேசங்கள், திருமண நிகழ்ச்சிகளில் எத்தனை பெண்கள் எப்படியெல்லாம் கிளாமராக வந்து செல்கிறார்கள்தெரியுமா? என்று பொரிந்து தள்ளிய திரிஷா சினிமாவில் காட்டினால் மட்டும் தப்பா என்றார்.

இல்லை.. நான் கேள்வி கேட்டது தாம்மா தப்பு !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil