Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஈகோவை தூக்கி போட்டுட்டு.. லைஃப என்ஜாய் பண்ணுங்க ... ஜாலியாக பனியில் சறுக்கி விளையாடும் சம்மு!
சென்னை: தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் சமந்தாவின் நடிப்பை பார்த்து பலரும் அசந்து போயினர்
இந்த நிலையில் மற்றுமொரு பான் இந்தியா வெப் சீரிஸில் சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா இப்பொழுது பனியில் சறுக்கி விளையாடும் ஜாலி வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார்
போடுறா வெடிய.. பிக் பாஸ் அல்டிமேட் கிராண்ட் லாஞ்சை விஜய் டிவியிலும் பார்க்கலாமா? ஹைலைட்ஸ் எதில்?

இரண்டு கதாநாயகிகள்
தென்னிந்தியாவில் அனைவருக்கும் பிடித்த மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா இப்பொழுது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முக்கோண காதல் கதையில் உருவாகிவரும் இந்த படத்தில் சமந்தா, நயன்தாரா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூரில் நடைபெற்று முடிந்துள்ளது.

இலங்கை தமிழ் போராளியாக
ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் சமந்தா தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் டீகே மற்றும் ராஜ் இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் இலங்கை தமிழ் போராளியாக நடித்து ஆக்ஷனில் அட்டகாச படுத்தியிருந்தார். யாரும் சற்றும் எதிர்பார்த்திராத சமந்தாவின் இந்த மிரட்டலான நடிப்பு இவருக்கு பாலிவுட்டிலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுக் கொண்டுள்ளது.

ஆக்ஷனில் தெறிக்க விட
ஃபேமிலி மேன் வெற்றியைத் தொடர்ந்து மற்றுமொரு திரில்லர் வெப்சீரிஸில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த முறையும் ஆக்ஷனில் தெறிக்க விட தயாராகி வருகிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என ஐந்துமொழிகளிலும் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.

சகுந்தலம்
தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வாழ்க்கை வரலாற்று பாடமாக சகுந்தலம் உருவாகி வருகிறது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சாகுந்தலம் வெளியாகிறது.

லைஃப சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க
மிரட்டலான நடிப்பில் ஒவ்வொரு படங்களிலும் பிரமாதப்படுத்தி வரும் சமந்தா கவர்ச்சியிலும் தாறுமாறு செய்து வருகிறார். இந்த நிலையில் பனிசறுக்கில் விளையாடும் ஜாலி வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதோடு ஈகோவை தூரம் தூக்கி போட்டுவிட்டு லைஃபை சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க என பாசிட்டிவ்வாக சமந்தா பதிவிட்டுள்ள இந்த பதிவுக்கு லைக்குகள் குவிகின்றன.