»   »  "முஸ்தபா முஸ்தபா".. கண்களால் கைது செய்த காதலரை வருஷக் கடைசியில் கரம் பிடிக்கிறார் முத்தழகு!

"முஸ்தபா முஸ்தபா".. கண்களால் கைது செய்த காதலரை வருஷக் கடைசியில் கரம் பிடிக்கிறார் முத்தழகு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு இறுதியில் தனது காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம் நடிகை பிரியாமணி.

பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரியாமணி. கார்த்தி ஜோடியாக இவர் நடித்த பருத்தி வீரன் படம் பிரியாமணிக்கு திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருது கிடைத்தது.

தமிழில் வாய்ப்பில்லை...

தமிழில் வாய்ப்பில்லை...

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களிலும் பிரியாமணி நடித்துள்ளார். தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், கன்னடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

காதல்...

காதல்...

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா என்பவரை பிரியாமணி காதலித்து வருவதாக தகவல் பரவியது. இருவரும் ஜோடியாக விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

விரைவில் திருமணம்...

விரைவில் திருமணம்...

இந்த சூழ்நிலையில், தற்போது தனது காதல் விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார் பிரியாமணி. இந்தாண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

நடன நிகழ்ச்சியில் அறிமுகம்..

நடன நிகழ்ச்சியில் அறிமுகம்..

இது குறித்து வார இதழ் ஒன்றிற்கு பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், "நானும் முஸ்தபாவும் காதலிக்கிறோம். இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தோம்.

நட்பு காதலானது...

நட்பு காதலானது...

ஆரம்பத்தில் நட்பாக பழகினோம். பிறகு காதல் வயப்பட்டோம். நாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். இந்த வருடம் இறுதியில் எங்கள் திருமணம் நடக்கும்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்...

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்...

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் சினிமாவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
South Indian actress Priyamani is soon going to tie the knot with her boyfriend Mustafa Raj. Mustafa is a Manager at a popular event management company in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil