»   »  ராதிகா எப்படி அப்படி பேசலாம்: கொந்தளிக்கும் டோலிவுட்

ராதிகா எப்படி அப்படி பேசலாம்: கொந்தளிக்கும் டோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆணாதிக்கம் மிக்க தெலுங்கு திரை உலகில் நடிக்க விரும்பவில்லை என கூறிய ராதிகா ஆப்தேவுக்கு எதிராக திரும்பியுள்ளது டோலிவுட்.

ராதிகா ஆப்தே பாலகிருஷ்ணாவின் லயன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகம் ஆணாதிக்கம் மிக்கது என்றும், அங்கு பணிபுரிவது மிகவும் கடினமாக உள்ளது என்றும் அண்மையில் தெரிவித்தார் ராதிகா. மேலும் இனி தான் தெலுங்கு படங்களில் நடிக்கப் போவது இல்லை என்று கூறி ராதிகா பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராதிகாவின் பேச்சால் தெலுங்கு திரை உலகினர் எரிச்சல் அடைந்துள்ளனர்.

ராதிகா

ராதிகா

பாலகிருஷ்ணா, ராதிகா ஆப்தேவை வைத்து லெஜன்ட் படத்தை தயாரித்த சாய் கொர்ரபாதி கூறுகையில், படப்பிடிப்பின்போது அந்த பொண்ணு மிகவும் நன்றாக நடந்து கொண்டார். அவருக்கு உரிய மரியாதை அளித்தோம். அவரது நடிப்பை பார்த்து அதிகமாகவே சம்பளமும் அளித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

லயன்

லயன்

படப்பிடிப்பின்போது ராதிகாவை பாரபட்சமில்லாமல் தான் நடத்துகிறோம். அப்படி இருந்தும் அவர் ஏன் அவ்வாறு பேட்டி அளித்துள்ளார் என தெரியவில்லையே என பாலகிருஷ்ணா, ராதிகா நடிக்கும் லயன் பட இயக்குனர் சத்யதேவ் தெரிவித்துள்ளார்.

தடை

தடை

தெலுங்கு திரை உலகில் வேலை பார்த்துக் கொண்டு அதை பற்றி தவறாக பேசிய ராதிகா ஆப்தேவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டோலிவுட்காரர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம் தேட நினைத்து ராதிகா டோலிவுட்டை பற்றி இவ்வாறு குறை கூறி பரபரப்பாக பேட்டி அளித்துள்ளதாக தெலுங்கு திரை உலகில் உள்ள பெரிய ஆட்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

English summary
Tollywood is irritated by Radhika Apte's recent interview about the telugu industry calling it as male dominated.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil