»   »  "ஃபுல் டைம்" எனக்கு சரிப்படாதுப்பா..: அமலா

"ஃபுல் டைம்" எனக்கு சரிப்படாதுப்பா..: அமலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முழு நேர நடிகையாக மீண்டும் நான் வலம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வளவு பிசியாக இருக்கிறேன் என்று கூறிச் சிரிக்கிறார் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற அழகு நடிகை அமலா.

அமலா பால் வருவதற்கு முன்பு தமிழக ரசிகர்களை கிறங்கடித்தவர் இந்த அழகு நிலா அமலாதான். டி.ராஜேந்தரின் கண்டுபிடிப்பான இந்த அழகு மைதிலிக்கு அக்காலத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

ரஜினி, கமல் என சூப்பர்ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்டு அடித்து விட்டுத்தான் ஓய்ந்தார் அமலா.

அம்மா, அப்பா விளையாட்டு...

அம்மா, அப்பா விளையாட்டு...

இந்த நிலையில் மீண்டும் அவர் நடிக்க வந்துள்ளார். சத்யா, வெற்றி விழா என கமல்ஹாசனுடன் இணைந்து சில கலக்கல் படங்களைக் கொடுத்தவரான அவர் தமிழ் தெலுங்கில் கமல் நடிக்க உருவாகும் அம்மா அப்பா விளையாட்டு படத்தில் நடிக்கவுள்ளார்.

அமலா...

அமலா...

வளையோசை கலகலவென என்று இவரும், கமலும், இளையராஜா இசைக்கு வாயசைத்து ஆடிப் பாடிய அந்த வசந்தகாலம் இன்னும் ரசிகர்களின் மனதை விட்டு இறங்கவில்லை. அதே கலகல சிரிப்புடன்தான் இப்போதும் இருக்கிறார் அமலா.

மீண்டும் கமலுடன்...

மீண்டும் கமலுடன்...

அப்படி ஒரு அருமையான கெமிஸ்ட்ரியுடன் சத்யா படத்தில் கமலும், அமலாவும் அசத்தியிருப்பார்கள். அதேபோன்ற கெமிஸ்ட்ரியை இப்போதும் அவர்கள் இருவரும் இணையும் படத்தில் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

கேமியோ மட்டும்...

கேமியோ மட்டும்...

இதுகுறித்து அமலா கூறுகையில், "என்னால் நம்பவே முடியவில்லை. இன்னும் நீ நடிக்கிறியா அமலா என்று கமல்ஹாசனே என்னிடம் கேட்டார். அதற்கு நான், ஆமாம் சார். ஆனால் முழு நேரமாக நடிக்கவில்லை. கேமியோ மட்டுமே செய்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.

பொருத்தமான கதை...

பொருத்தமான கதை...

நான் நடிக்க சம்மதம் தெரிவித்ததும், என்னிடம் கதை சொல்வதற்காக மலையாள இயக்குநர் ராஜீவ் குமாரை அனுப்பி வைத்தார் கமல். கதையைக் கேட்டவுடன் எனக்குப் பிடித்துப் போய் விட்டது. எனக்குப் பொருத்தமான கதை.

ஆர்வம்...

ஆர்வம்...

அமெரிக்காவில் இப்படத்தை ஷூட் செய்யவுள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று நினைக்கிறேன். இப்படத்தில் நடிக்கப் போவதை நினைத்தால் எனக்கு இப்போதே பெரும் ஆர்வமாக உள்ளது.

ரொம்ப பிசி...

ரொம்ப பிசி...

முழுநேரமாகவெல்லாம் என்னால் நடிக்க முடியாதுப்பா. நிறைய பிசியாக உள்ளேன். நிறைய வேலைகள் என்னைச் சூழ்ந்துள்ளன. நிறைய பொறுப்புகள் உள்ளன. எனக்கென்று வரும் பொருத்தமான பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.

சினிமா தான் எல்லாம்...

சினிமா தான் எல்லாம்...

சினிமா தான் எனக்கு எல்லாமே தந்தது. கற்றுத் தந்தது. அதை விட்டு என்னால் போக முடியாது. அதனால்தான் கேமியோ ரோல்களில் மட்டும் தொடர்கிறேன்" என்கிறார் அதே நீள வாய்ச் சிரிப்புடன் அமலா.

English summary
Actress Amala Akkineni, who has played a few cameo roles in the last few years, says she’s only open to do such roles but has no plans of getting into full-fledged acting as she already has too much on her plate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil