Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 11 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமாவில் அசத்தும் உலக அழகிகள்...
மிஸ் இந்தியாவில் தொடங்கி பிரபஞ்ச அழகி பட்டம் வரை வென்றுள்ள அழகிகள் குறிவைப்பது பாலிவுட் பட வாய்ப்பைத்தான்.
அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஜீனத் அமன் தொடங்கி இன்றைய பார்வதி ஓமனக்குட்டன் வரை சினிமாவில் நடித்து புகழ் பெற்றவர்கள்தான். அழகிப்பட்டம் தராத புகழை சினிமா தருகிறது. தவிர கைநிறைய பணமும் கிடைக்கிறது என்பதுதான் சினிமாவை தேர்ந்தெடுக்கக் காரணம்.
மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற அழகு தேவதைகள் பலரும் சினிமாவில் நடிக்க வந்துள்ளனர். அவர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் நமது ரசிகர்கள். அந்த அழகிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

நபீஷா அலி
மிஸ் இந்தியா பட்டம் வென்ற நபீஷா அலி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 1976ல் பட்டம் வென்ற அவர், எய்ட்ஸ் விழிப்புணர்வு படங்களில் நடித்துள்ளார்.

ஜீனத் அமன்
மிஸ் ஏசியா பசுபிக் பட்டம் வென்றவர் ஜீனத் அமன். 1970 பட்டம் வென்ற உடனேயே பாலிவுட் பட உலகில் காலடி எடுத்து வைத்தார். அன்றைய ரசிகர்களின் கனவு நாயகியாக திகழ்ந்தார். இன்னமும் ஜீனத் அமன் என்றாலே கனவில் மூழ்கும் நடுத்தர வயதினர் இருக்கின்றனர்.

ஜூகி சாவ்லா
மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஜூகி இன்றைக்கும் அழகிதான். 1984 பட்டம் வென்றவரை பாலிவுட் பட உலகம் வரவேற்றது. பட்டம் வென்று 30 வருடங்களைத் தொடப்போகும் ஜூகி சாவ்லாவின் சிரிப்பு இன்னமும் ரசிகர்களை கிறங்கடிக்கும்.

சுஸ்மிதா சென் 1994 மிஸ் யுனிவர்ஸ்
சுஸ்மிதா, ஐஸ்வர்யா இடையேயான போட்டியில் கடைசியில் சாமர்த்தியமான பதிலால் ஐஸ்வர்யாவை முந்தியவர் சுஸ்மிதா சென். அதனாலேயே பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வானார். அவருக்கு பாலிவுட் படவாய்ப்பும் தேடி வந்தது.

ஐஸ்வர்யா ராய், 1994 மிஸ் வேர்ல்ட்
1994 ல் உலக அழகி பட்டம் வென்றாலும் 18 ஆண்டுகளாக பாலிவுட், கோலிவுட் பட உலகில் தனக்கென்று ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்திருக்கிறார். தேவதாஸ், தூம், எந்திரன், என பல படங்கள் அவருக்கு புகழை பெற்றுத் தந்திருக்கின்றன. நடிகையாக மட்டுமல்லாது அமிதாப் வீட்டு மருமகளாகவும் ஆகியுள்ளார் ஐஸ்வர்யா.

பிரியங்கா சோப்ரா
2000 ஆண்டு மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா பாலிவுட் பட உலகில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார். தமிழில் அவர் முதலில் நடித்த படம் வெற்றி பெறவில்லை என்பதால் இந்த பக்கம் மீண்டும் வர யோசிக்கவே இல்லை.

லாரா தத்தா
2000ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற லாரா தத்தா பாலிவுட் பட உலகில் நுழைந்தார். தமிழில் கூட அர்ஜூன் படத்தில் நடித்தார். பின்னர் மகேஷ் பூபதியுடன் காதல் திருமணம் என்று செட்டில் ஆகிவிட்டார் லாரா.

நேகா துபியா
மிஸ் இந்தியா பட்டம் வென்ற நேகா துபியா இப்போது பாலிவுட் பட உலகில் கவர்ச்சியாக நடித்து கலக்கி வருகிறார். 32 வயதாகும் அவருக்கு எளிமையாக திருமணம் செய்வதில்தான் விருப்பமாம்.

செலீனா ஜெட்லி, தியா மிஸ்ரா
மிஸ் ஏசியா பசுபிக் 2000 பட்டம் வென்ற தியா மிஸ்ராவும், இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற செலீனா ஜெட்லி மாடலிங் உலகில் இருந்து பாலிவுட் படங்களில் நடித்தார். துபாய் தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட்டார்.

பார்வதி ஓமனக்குட்டன்
2008 ல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற பார்வதி ஓமனக்குட்டன் சில பாலிவுட் படங்களில் நடித்தார். அங்கு வெற்றி பெற முடியவில்லை. தமிழ், மலையாளம் என கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவர் நடித்த பில்லா 2 கைவிட்டு விட்டது. எனவே தாய் மண்ணான மலையாளக் கரையில் ஒதுங்கிவிட்டார்.

திரிஷா
மிஸ் சென்னை பட்டம் வென்ற கையோடு நடிக்க வந்த திரிஷா இன்னமும் நாட் அவுட் நடிகைதான்.