»   »  கோலிவுட் டாப் ஹீரோயின்-2007!

கோலிவுட் டாப் ஹீரோயின்-2007!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Asin
2007ம் ஆண்டு நிச்சயமாக ஆசினுக்கு சந்தோஷமான ஆண்டாக அமைந்திருக்கும். காரணம், அவர் நடித்த 3 படங்களில் 2 சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

2007ல் கோலிவுட் ராணியாக வலம் வந்த ஆசினுக்கு, ஆண்டின் தொடக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த போக்கிரி சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.

பொங்கலுக்கு போக்கிரி வெளியானது. அதே பொங்கலுக்கு அஜீத்துடன் இணைந்து ஆசின் நடித்த ஆழ்வார் படமும் வெளியானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படம் தோல்விப் படமாக அமைந்து போனது.

லேட்டஸ்டாக ஆசின் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம் வேல். போக்கிரியை விட வேல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதால். ஆசினுக்கு இரட்டிப்பு சந்தோஷம். நடித்த மூன்றில் 2 படங்கள் சூப்பர் ஹிட் என்பதால் ஆசினின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

சிவாஜியில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஷ்ரியா அதன் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார். தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்த அழகிய தமிழ் மகன் அவரை ஏமாற்றியது.

நயனதாராவுக்கு இந்த ஆண்டு சந்தோஷ ஆண்டாக அமைந்துள்ளது. அஜீத்துடன் இணைந்து நடித்த பில்லா, சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் வல்லவன் தேக்கத்திற்குப் பிறகு தோய்ந்திருந்த அவரது முகத்தில் சந்தோஷம் ஒட்டிக் கொண்டுள்ளது.

இதேபோல இன்னொரு சந்தோஷ நடிகை பிரியா மணி. பருத்தி வீரன் இவருக்கு பெரிய பிரேக் ஆக அமைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கை நிறையப் படங்களுடன் வலம் வருகிறார் பிரியா மணி.

பிரியா மணிக்கு இன்னொரு சந்தோஷம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியது. 2008ம் ஆண்டிலும் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒளி வீசட்டும்.

திரிஷாவுக்கு இந்த ஆண்டு சந்தோஷ ஆண்டாக அமையவில்லை. அஜீத்துடன் இணைந்து நடித்த கிரீடம் பெரிய அளவில் போகாதது அவருக்கு வருத்தமே. ஆனால் நிச்சயமாக 2008 திரிஷாவின் ஆண்டாக அமையும். காரணம், அவர் நடித்து வரும் குருவி, அபியும் நானும், பீமா ஆகியவை அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளன.

பொல்லாதவன் மூலம் தமிழுக்குத் திரும்பி வந்துள்ள குத்து ரம்யாவுக்கு இந்த ஆண்டு நிச்சயம் சந்தோஷமாக இருக்கும். காரணம், படம் சூப்பர் ஹிட் ஆனதோடு, குத்து ரம்யாவும் கவனிக்கப்பட்டதால்.

இந்த ஆண்டில் ஆசின் அசத்தினார். அடுத்த ஆண்டும் அவர் கலக்குவார் என எதிர்பார்க்கலாம் - ஏனெனில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ள தசாவதாரம் அடுத்த ஆண்டு ரிலீஸாகிறது என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil