»   »  அய்யோ.. எடை ஏறிப்போச்சே... குறைக்க முடியலியே... தவிக்கும் டாப் நடிகைகள்!!

அய்யோ.. எடை ஏறிப்போச்சே... குறைக்க முடியலியே... தவிக்கும் டாப் நடிகைகள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர்கள்தான் முன்பெல்லாம் எடையை ஏற்றி இறக்கி படங்களில் நடித்து ஆச்சயப்படுத்துவார்கள். இப்போது சில நடிகைகளுக்கு உடம்பு போட்டு விட்டதால் எடை ஏறி விட்டதாம். நடிகைகளாயிற்றே... ஆச்சர்யப்படுவதற்கு பதில் அதிர்ச்சிதான் ஆகியிருக்கிறார்கள்.

லட்சுமிமேனன்

லட்சுமிமேனன்

கும்கி மூலம் அறிமுகமான லட்சுமிமேனனுக்கு இன்னும் இருபத்திரண்டு வயது கூட ஆகவில்லை. ஆனால் ஆண்ட்டி என்று சொல்லும் அளவுக்கு எடையேறி விட்டதாம். லட்சுமிமேனன் சமீபத்தில் நடித்து வெளியான றெக்க படத்தில் இது நன்றாகவே தெரிந்தது. நன்றாகத்தான் இருந்தார். டீச்சராக இருக்கும் அம்மாவின் அட்வைஸ் படி இடையில் நடிப்பை விட்டு படிப்பில் சில காலம் ஆர்வம் காட்டினார். அப்போது கல்லூரி கேண்டீனில் இஷ்டத்துக்கு சாப்பிட்டதில் உடல் பெருத்துவிட்டதாம். எடையை குறைக்க முயன்றும் முடியாததால் எடையாலேயே விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பை இழந்திருக்கிறார். இப்போதைக்கு பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் படம் மட்டுமே கைவசம் இருக்கிறது.

அஞ்சலி

அஞ்சலி

ரீ எண்ட்ரி ஆன அஞ்சலிக்கு கிடைத்த கேப்பில் ஏறிய எடையே எதிரியாகி போனது. ரீ எண்ட்ரியில் அஞ்சலி நடித்த சககலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி படங்களில் ஏறிய உடம்பு உறுத்தலாக இருக்கவே அடுத்தடுத்து படங்கள் எதுவும் இல்லை. காதலர் ஜெய்யுடன் நடிக்கும் பலூன் படம் மட்டுமே கையில் இருக்கிறது. மேரேஜ் தான் அம்மணிக்கு இருக்கும் ஒரே வழி!

அனுஷ்கா

அனுஷ்கா

மற்றவர்கள் எல்லாம் கவனக்குறைவால் விருப்பப்பட்டதை சாப்பிட்டு உடலை ஏற்ற, அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்துக்காக ஏற்றிய உடலை இளைக்க வைக்க முடியாமல் தவிக்கிறார். படத்தின் கதைக்காக ரிஸ்க் எடுத்து உடலை ஏற்றினார் அனுஷ்கா. அந்த எடை இறங்க மறுக்க பாகுபலியையும் பதம் பார்த்தது ஓவர் வெயிட். இன்னமும் பழைய எடைக்கு வர முடியாமல் தவிக்கிறார் அனுஷ்கா.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இப்போதுதான் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் வயப்புகள் வரத் தொடங்குகிறது. அதற்குள்ளாகவே பூசினாற் போல் ஆகிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகையான அம்மாவின் டயட் ஆலோசனைகள் கை கொடுக்காததால் ரொம்பவே தவிக்கிறார் கீர்த்தி. பாடல் காட்சிகளில் தொப்புள் காட்டவே மறுக்கிறார். எனவே பெரிய ஹீரோக்கள் படங்கள் இனி கிடைப்பது சிரமம்தான்.

English summary
Top actress in South Indian movies are struggling with weight gaining issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil