For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கோலிவுட் 2012: ஹீரோயின்களில் யார் டாப்?

  By Shankar
  |

  டாப் ஹீரோயின்கள் என்று சொல்லப்பட்ட நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத நிலை.

  வெளியான படங்களில் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்ந்தவர்கள் யார் என்பது குறித்த ஒரு பார்வை இது.

  ஹன்ஸிகா, அமலா பால், அஞ்சலி, ஸ்ருதிஹாஸன் என சில நாயகிகளின் படங்கள்தான் இந்த ஆண்டு அடிக்கடி வெளியாகின. ஆனால் இவர்கள் யாரையும்விட அதிகம் பேசப்பட்டவர் ஒருவர் இருக்கிறார்... அவரைப் பற்றி கடைசி ஸ்லைடரில் பார்க்க...

  அமலா பால்

  அமலா பால்

  இந்த ஆண்டு அமலா பால் 3 படங்களில் நடித்தார். அவற்றில் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள் இரண்டும் அவுட். மூன்றாவதாக வந்த காதலில் சொதப்புவது எப்படி, நல்ல ஹிட். இடையில் ஒரு முறை அமெரிக்கா போய் அழகை ஏற்றிக் கொண்டு வந்தார் அமலா. இப்போது கைவசம் நிமிர்ந்து நில், விஜய்யின் பெயரிடப்படாத படம் என பெரிய ஹீரோக்களின் நாயகியாக அந்தஸ்து பெற்றுள்ளார்.

  ஹன்சிகா

  ஹன்சிகா

  கடந்த ஆண்டு மாதிரி நிறைய படங்கள் இல்லை ஹன்சிகாவுக்கு. ஆனால் ஒரே படம் என்றாலும் ஒரு கல் ஒரு கண்ணாடி ப்ளாக் பஸ்டராய் அமைந்தது. இப்போது சேட்டை, வேட்டை மன்னன், சிங்கம் 2, வாலு மற்றும் பிரியாணி என 5 படங்கள் கைவசம். அடுத்த ஆண்டு அநேகமாக அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை ஹன்சிகாவைத்தான் சேரும்.

  காஜல் அகர்வால்

  காஜல் அகர்வால்

  மாற்றான், துப்பாக்கி என இரு படங்களில் நடித்தார் 2012-ல் காஜல் அகர்வால். இவற்றில் மாற்றான் அவுட்... துப்பாக்கி ஹிட். ஆனாலும் கைவசம் ஒரே ஒரு பெரிய படம்தான் உள்ளது. அது கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா.

  அஞ்சலி

  அஞ்சலி

  குடும்பப் பெண்ணாக மட்டுமே இருந்த அஞ்சலி, கும்மாங்குத்து போடும் கவர்ச்சி நடிகையாகவும் களமிறங்கி கலக்கிய கலகலப்பு 2012-ல்தான் வெளியானது. வரவிருக்கும் சேட்டை, வத்திக்குச்சி, மதகஜராஜாவில் இன்னும் கவர்ச்சியான அஞ்சலியைப் பார்க்கலாம்.

  ஸ்ருதிஹாஸன்

  ஸ்ருதிஹாஸன்

  இவருக்கு தமிழ் சினிமாவே பிடிக்காது போல. தனுஷூக்காக '3' படத்தில் நடித்தவர், அதன் பிறகு எந்தப் படத்தையும் தமிழில் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது முழு கவனமும் இந்தி - தெலுங்குதான். இவர் நடித்த இரு தமிழ்ப் படங்களுமே தோல்வி என்றாலும், கமல் பெண் என்பதாலோ... ஈஸியாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதாலோ... இன்னும் லைம்லைட்டில் இருக்கிறார்.

  அனுஷ்கா

  அனுஷ்கா

  அனுஷ்கா இந்த ஆண்டு நடித்தது தாண்டவம் படத்தில் மட்டும்தான். சகுனியில் கெஸ்ட் ரோல். இரண்டுமே ஓடவில்லை. இப்போது அவர் பெரிதாய் நம்புவது செல்வராகவனின் இரண்டாம் உலகம் மற்றும் சூர்யாவின் சிங்கம் 2 படங்களைத்தான்.

  சமந்தா

  சமந்தா

  இந்த ஆண்டு கோடம்பாக்கம், சினிமா பத்திரிகையுலகம், சமூக வலைத் தளங்கள் என எங்கும் பல்வேறு காரணங்களுக்காக நீக்கமற நிறைந்த முகம் சமந்தாவுடையதுதான்.

  ரொம்ப எதிர்ப்பார்க்கப்பட்ட நீதானே என் பொன்வசந்தம் சரியாகப் போகாவிட்டாலும், சமந்தாவின் மவுசு குறையவில்லை. அநேகமாக அடுத்த ஆண்டு டாப் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருப்பார்.

  லட்சுமி மேனன்

  லட்சுமி மேனன்

  எல்லா நடிகைகளையும் மிஞ்சக்கூடிய புதுமுகம் ஒருவர் இந்த ஆண்டு அறிமுகமானார் என்று நாம் முன்பு குறிப்பிட்டோமே... அவர் இந்த லட்சுமி மேனன்தான்.

  அழகு, நடிப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் கூடி வந்த நடிகையாகத் திகழ்கிறார் லட்சுமி மேனன். இவர் அறிமுகமான முதல் படம் கும்கி. ஆனால் இவர் இரண்டாவதாக நடிக்க ஒப்புக்கொண்ட சுந்தரபாண்டியன்தான் முதலில் வெளியானது. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்.

  ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இவருக்காக இப்போது காத்திருக்கிறார்கள். 2013-ன் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்வதற்கான அனைத்து அறிகுறிகளும் லட்சுமி மேனனிடம் தெரிகின்றன.

  English summary
  Here is the list of top heroines of Kollywood in the here 2012
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X