»   »  பாவம் இந்த ஹீரோயின்கள்... எவ்வளவு மெனக்கெட வேண்டிருக்கு தெரியுமா?

பாவம் இந்த ஹீரோயின்கள்... எவ்வளவு மெனக்கெட வேண்டிருக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
எப்படி இருந்த திரிஷா இப்படி ஆய்ட்டாளே!- வீடியோ

ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கு. அந்த ஸ்பெஷலை மெயின்டெய்ன் பண்ண பாவம் அவங்க எவ்வளவு மெனக்கடறாங்கன்னு பார்ப்போமா?

ஹன்சிகா

ஹன்சிகா

பப்ளியா இருந்துட்டு ஸ்லிம் ஆகிட்டாங்களேன்னு டயட் டிப்ஸ் கேட்டோம்... டயட்னு சொல்லிட்டுக் கம்மியா சாப்பிடுறதோ, பட்டினி கிடப்பதோ இவங்களுக்குப் பிடிக்காது. நல்லாச் சாப்பிடணும். அதே சமயம் உடல் எடை குறையணும்னு ஆசைப்பட்ருக்காங்க. ஒரு நாள் உணவை நான் எட்டு வேளைகளாப் பிரித்து
சாப்பிடுவாங்களாம். காலையில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஒரு டம்ளர் + ஒரு ஆப்பிள். ஆப்பிளில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. அதனால், அடிக்கடி பசிக்காது. ஹன்ஸோட குரு மிக்கி மேத்தா சொல்லி இருக்காராம். அவர் 'இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு'ன்னு லிஸ்ட் போட்டுக் கொடுக்காமல், எந்தெந்த உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது, என்ன சத்துக்கள் உள்ளன, எப்படிச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று சொல்லிக்கொடுத்தாராம். அதை அப்படியே கடைபிடிக்க ஆரம்பிச்சுருக்காங்க. இப்போ,
கை மேல் பலன். ஆப்பிள் நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிடுமாம். நீங்களும் டிரை பண்ணுங்களேன்... முன்னாடி எல்லாம் மைதா, கோதுமை உணவைத்தான் சாப்பிடுவாங்களாம். இப்போ, மைதா, அதில் செய்த ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துறாங்க. சீஸ், எண்ணெய்க்கும் குட் பை சொல்லிட்டாங்களாம். இதுதான் ஸ்லிம் ஆன சீக்ரெட்.

பளிச் தமன்னா

பளிச் தமன்னா

எப்பவுமே பளிச்சுனு இருக்கிறது தமன்னாவோட ஸ்பெஷல்... இவங்களுக்கு கெமிக்கல் கலந்த மேக்கப் போடுவது பிடிக்காது. சினிமாவுக்காகக்கூட அதிகமா மேக்கப் போட்டுக்க மாட்டாங்க. மாய்ஸ்ச்சரைசரை மட்டும்தான் பயன்படுத்துவாங்க. பப்பாளி, கொய்யா, மாம்பழம், சப்போட்டா, தக்காளினு பழங்களை வைத்து வாரம் ஒருமுறை முகத்துக்கு பேக். தேன் தோலுக்கு ரொம்பவே நல்லது. ஒரு ஸ்பூன் தேனோட பயத்தமாவு கலந்து முகத்துக்கு அப்ளை பண்ணுவாங்க. தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் குடிப்பாங்க. 10 நிமிஷம் கண் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைச்சுப்பாங்க.

இதெல்லாமே ஏற்கெனவே அழகான தமன்னா முகத்தை இன்னும் அழகாக்குது.

கண்ணழகி லட்சுமி மேனன்

கண்ணழகி லட்சுமி மேனன்

கண்ணழகி லட்சுமி மேனன் கண்களை எப்படி பாதுகாக்குறாங்கனு தெரிஞ்சுப்போம். லட்சுமிக்கு கதகளி நல்லாத் தெரியும். கதகளியில் கண்களின் எக்ஸ்பிரஷன்ஸ் ரொம்ப முக்கியம். அதைச் செய்து செய்து கண்கள் ரொம்ப அழகாகி இருக்கும்னு நினைக்கிறேன்னு சொல்றாங்க. கண்களுக்காக ரெகுலரா ஒரு பயிற்சி செய்வாங்களாம். அது ரொம்ப சிம்பிள்... கண்களாலயே எட்டு போடணும். முதலில் ஒரு கண்ணை எட்டாம் நம்பர் வடிவத்தில் சுழற்றணும். அப்புறம் மறு கண்ணையும் இதேபோலச் சுழற்றணும். இப்படி இரண்டு கண்களினாலும் மூன்று முறை தினமும் செய்தால் பார்வை தெளிவா இருக்கும். கண்கள் எப்போதும் அழகாகவும் இருக்குமாம்!''

பூ பார்வதி மேனன்

பூ பார்வதி மேனன்

மேக்கப் இல்லாமலேயே அழகா இருக்காங்களே, எப்படி? பார்வதிக்கு இயல்பா இருக்கத்தான் பிடிக்கும். ஸ்கின் பாதுகாப்புக்காக, சன்ஸ்க்ரீன் போட்டுக்கணும்கிறது அம்மாவோட அட்வைஸ். அதை மட்டும் விடாமப் போட்டுக்கறாங்க. மத்தபடி மேக்அப் போட்டுக்கப் பிடிக்காது. ஷூட்டிங் இல்லாதப்ப, வெளியில் எங்கே போனாலும், மினிமம் மேக் அப்லதான் போகும் இந்த பொண்ணு. பிளீச்சிங், பேஷியல் எதுவும் கிடையாது. சருமத்தை இயற்கையா சுவாசிக்க விடணுமாம். மேக் அப், க்ரீம்களை எல்லாம் போடறதால், சருமத்துல அடைப்பு ஏற்பட்டு இயற்கையா இருக்கிற பளபளப்பு கெட்டுப் போயிடும். அதனால பெரும்பாலும் தவிர்த்திடுவேன். அதுவே என் சருமம் பளபளப்பா, பொலிவா இருக்கக் காரணம். இன்னும் சருமம் ஆரோக்கியமா இருக்க, நிறையத் தண்ணி குடிப்பேன். முக்கியமா, இளநீர் தினமும் குடிப்பேன்னு சொல்றாங்க

வெள்ளாவி தேவதை டாப்ஸி

வெள்ளாவி தேவதை டாப்ஸி

உங்க ஸ்கின் கலரை எப்படி மெய்ண்டெய்ன் பண்றீங்க? 'என் ஸ்கின் டைப் எனக்குக் கிடைச்சப் பெரிய கிஃப்ட். அதனால் ஸ்கின்னைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன். கஞ்சி, ஜூஸ், நிறைய வாட்டர் என்று திரவ உணவை அதிகமாக எடுத்துப்பேன். முக்கியமான விஷயம்... என்னை எப்பவும் சந்தோஷமா வைத்துக் கொள்வேன். எப்பவும் பாசிட்டிவ்வா, மனசை காம் அண்ட் கம்போஸ்டா வெச்சிருந்தா உடம்பு, சருமம், முகமும் க்ளோயிங்கா இருக்கும்னு சொல்றாங்க

புருவ அழகி கார்த்திகா

புருவ அழகி கார்த்திகா

கண் புருவங்களுக்காக என்னவெல்லாம் கேர் எடுத்துக்குறீங்க?

''வைட்டமின் ஏ அதிகமா இருக்கும் உணவுகள் நிறைய எடுத்துப்பேன். ராத்திரி சீக்கிரமாகவே தூங்கிடுவேன். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் நீங்க என் வீட்டுக்கு வந்தால், பெட்லதான் என்னைப் பார்ப்பீங்க. அந்த அளவுக்குத் தூக்கம் எனக்குப் பிடிக்கும். இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் நல்லாத் தூங்குவதால், என் கண்களில் கருவளையம் மாதிரியான பிரச்னைகள் இல்லவே இல்லை.''

பிட்னெஸ் அழகி ஸ்ரேயா

பிட்னெஸ் அழகி ஸ்ரேயா

செம ஃபிட்டா இருக்கீங்க... ஸ்ட்ரெச்சரை எப்படி மெய்ண்டெய்ன் பண்றீங்க?

எனக்கு டான்ஸ்னா உயிர். டான்ஸ் பண்றப்ப உங்க உடம்பில் இருக்கிற தேவையில்லாத சதை கரைஞ்சிடும். பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருக்கலாம். நான் கதக் நடனக் கலைஞர் ஷோபனா நாராயணியிடம் முறைப்படி கதக் கத்துக்கிட்டேன். அப்பறம் நீச்சல் பயிற்சி. முழு உடம்புக்கும் இது நல்ல பயிற்சி. பயிற்சி செய்றோம்னே தெரியாது. இயல்பா இருக்கும். மெனக்கெடவே வேண்டாம்.

- ஆர்ஜி

English summary
Here is the special fitness tips of top heroines of Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X