»   »  அழகு தேவதைகளின் டைம்பாஸ் என்னென்ன தெரியுமா?

அழகு தேவதைகளின் டைம்பாஸ் என்னென்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நமக்கு பொழுதுபோக்கு சினிமா. அப்படி நம்மை மகிழ்விக்கும் ஹீரோயின்களின் பொழுதுபோக்கு என்னென்ன தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இவருக்குப் பின் எத்தனையோ உலக அழகிகள் வந்தாலும் இன்னமும் நமக்கெல்லாம் உலக அழகியாகவே விளங்கும் ஐஸின் பொழுதுபோக்கு என்ன தெரியுமா? குடும்பத்துடன் நேரத்தை கழிப்பது. அதிலும் முக்கியமாக செல்ல மகள் ஆராத்யாவுடன் விளையாடுவதுதான். குடும்பம் அருகில் இல்லை என்றால் ஹெட்போனில் ஹிந்தி பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எல்லாம் மாமனார் காலத்து கிளாஸிக் பாடல்கள்...

அசின்

அசின்

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர விசிறியான அசின் தனது சூப்பர் ஸ்டார் ஜோடியாகும் ஆசை நிறைவேறாமலேயே திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். பார்ட்டிகளுக்கு போவதுதானே மும்பை பெண்ணின் பொழுதுபோக்காக இருக்கும்? பார்ட்டி இல்லாத சமயங்களில் காரை எடுத்துக்கொண்டு செல்ஃப் ட்ரைவிங் கிளம்பி விடுவார். காரில் மியூசிக் முக்கியம்.

ஹன்சிகா

ஹன்சிகா

கையில் ஒரே ஒரு படம்தான் இருக்கிறது. இருந்தாலும் பிஸியாக காட்டிக்கொள்ளும் ஹன்சிகாவின் பொழுதுபோக்கு தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் விளையாடுவது. யாரும் இல்லையெனில் அதிர அதிர இசையை ஒலிக்க விட்டு டான்ஸ் ஆடுவாராம். ஈவ்னிங் ஃப்ரீ என்றால் வெளியில் போய் பானி பூரி சாப்பிடுவது பிடிக்கும்.

சமந்தா

சமந்தா

திருமணத்துக்காக காத்திருக்கும் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுடன் காதல் மொழி பேசவே நேரம் போதாது. பள்ளி, கல்லூரி தோழிகளுடன் அரட்டை அடிப்பது தான் இந்த வெண்ணெய் சிலையின் பொழுதுபோக்கு.

ஸ்ரேயா

ஸ்ரேயா

இந்த முன்னாள் ரஜினி ஹீரோயின் கையில் சிம்புவுக்கு ஜோடியாக ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. பொழுது போகவில்லை என்றால் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவாராம். ஹைதராபாத்துக்கு வெளியே ஒரு லாங் ட்ரைவ் செல்வது வழக்கம்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

படங்களில் நடிப்பது, பாடுவது தவிர ஸ்ருதிஹாசனுக்கு செல்ஃபி எடுக்கவே நேரம் போதாது. ஸ்ருதியின் முக்கிய பொழுதுபோக்கு கவிதைகள் எழுதுவது. நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அப்படியே அப்பாவைப் போலவே...

தமன்னா

தமன்னா

இந்த ஒல்லிபெல்லிக்கும் ட்ராவல்தான் இஷ்டம். சின்ன கேப் கிடைத்தாலும் தோழிகளைக் கூட்டிக்கொண்டு காஷ்மீர் சென்று விடுவார். அந்த குளிரில் பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும்.

த்ரிஷா

த்ரிஷா

இந்த ஸ்லிம் பியூட்டிக்கு பிடித்தது புத்தகங்களும் இசையும்தான். அது தவிர தான் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளுடன் பொழுதை கழிப்பார்.

நமக்கு டைம்பாஸ் இவங்களையெல்லாம் பார்த்து ரசிக்கிறதுதான்... ஹிஹிஹி!

English summary
Here is the type of time pass and entertaiment for leading heroines of Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil