»   »  மீண்டும் சேரும் விஜய், திரிஷா

மீண்டும் சேரும் விஜய், திரிஷா

Subscribe to Oneindia Tamil

சின்ன கேப்புக்குப் பிறகு மீண்டும் திரிஷாவுடன் ஜோடி போடுகிறார் விஜய். இருவரையும் இயக்கப் போவது கில்லி கொடுத்த தரணி.

விக்ரமை வைத்துத் தூள் பரத்திய தரணி, முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து கில்லி என்ற மாபெரும் மசாலாப் படத்தைக் கொடுத்தார். படமும் ஒரு ஓட்டம் ஓடியது.

விஜய், திரிஷா ஜோடிக்கு ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பு. அதிலும், திரிஷாவும், விஜய்யும் போட்ட அப்படிப் போடு பாட்டுக்கு அப்படி ஒரு வரவேற்பு, ஆர்ப்பரிப்பு.

தற்போது மறுபடியும் ஒரு படத்தில் இந்த மும்மூர்த்திகளும் இணைகிறார்கள். முதல்வர் கருணாநிதியின் பேரனும், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதான் இப்படத்தைதத் தயாரிக்கப் போகிறார்.

முதல் முறையாக தயாரிப்பில் இறங்குகிறார் உதயநிதி. விஜய், விஷாலை வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். முதலில் விஜய்யை வைத்து தயாரிக்கிறார். அழகிய தமிழ்மகன் படத்தில் நடித்து வரும் விஜய் அதை முடித்து விட்டு உதயநிதி படத்துக்கு வருகிறார்.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க திரிஷாவும் சம்மதித்துள்ளார். இருவரும் போக்கிரியிலேயே இணைந்திருக்க வேண்டும். ஆனால் விஜய்தான் ஒரு சேஞ்ச்சாக இருக்கட்டுமே என்று ஆசினிடம் போய் விட்டார்.

தரணி படத்தை இயக்கவுள்ளார். வித்யாசாகர் இசையமைக்கிறார். ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளாராம் உதயநிதி.

கிளாப் அடிக்க வருவாரா கருணாநிதி?

Please Wait while comments are loading...