»   »  நாசரின் அழகுப் பேத்தி!

நாசரின் அழகுப் பேத்தி!

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் மகா ஹிட்டான அத்தடு நந்து என்ற பெயரில் தமிழ் பேச வருகிறது.

மகேஷ்பாபு, திரிஷா, பிரகாஷ் ராஜ், நாசர் நடிப்பில் தெலுங்கில் வெளியான அத்தடு, அங்கு மாபெரும் ஹிட் படமாகும். பெரும் ஓட்டம் ஓடிய அத்தடு இப்போது தமிழில் டப் ஆகிறது.

பல திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ள எஸ்.வி.சோலைராஜாதான் இப்படத்தை வாங்கி தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளார். நந்து என தமிழ் டப்பிங்குக்கு பெயர் சூட்டியுள்ளனர்.

அத்தடுவில், ஒத்தடம் தருவது போல திரிஷா இதமான கிளாமர் காட்டி தெலுங்கு ரசிகர்களை தேவுடா, தேவுடா என புலம்ப வைத்திருந்தார். அந்தக் காட்சிகள் எல்லாம் இப்போது தமிழ் மகா ஜனங்களுக்கும் தரிசனம் தர வருகிறது.

ரூ. 20 கோடி செலவில் அத்தடுவைத் தயாரித்திருந்தனர். ஆனால் அதை விட கூடுதல் லாபத்தை தயாரிப்பாளருக்கு ஈட்டித் தந்தது அத்தடு. தமிழிலும் இப்படம் மாபெரும் ஹிட் படமாகும் என சோலை ராஜா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இப்படத்தில் திரிஷாவின் தாத்தா வேடத்தில் நாசர் நடித்துள்ளாராம். சிபிஐ அதிகாரியாக பிரகாஷ் ராஜ் வருகிறார். கிளாமர் மட்டுமல்லாமல் காமெடியிலும் கலக்கியிருக்கிறார் திரிஷா.

நந்து, திரிஷாவைக் கொஞ்ச நாளாக தரிசிக்காமல், நொந்து போயுள்ள ரசிக உள்ளங்களுக்கு பூப்பந்தாக இருக்கும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil