»   »  சிரு படத்தில் திரி!

சிரு படத்தில் திரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் திரிஷா.

தமிழிலும், தெலுங்கிலுமாக இரட்டை சவாரி செய்து வரும் திரிஷா, இரண்டு மொழிகளிலும் பெத்த வாய்ப்பு எதுவோ அதை ஏற்றுக் கொண்டு சட்டுப்புட்டென்று கால்ஷீட் கொடுத்து விடுகிறார். காரணம் போட்டிகள் அவ்வளவு கடுமையாக இருப்பதால்.

தமிழில் இப்போது விக்ரமுடன் இணைந்து பீமாவில் நடித்து வரும் திரிஷா அடுத்து விஷாலுடன் இணைகிறார். இந்த நிலையில், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் மீண்டும் ஜோடி போடும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.

இந்தியில் வெளியான லகே ரகோ முன்னாபாய் படத்தை தெலுங்கில் சங்கர்தாதா ஜிந்தாபாத் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். முன்னாபாய் எம்.பி.பி.எஸ். படத்தின் ரீமேக்கில் (சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்) நடித்த சிரஞ்சீவியே இப்படத்திலும் நடிக்கிறார். பிரபுதேவாதான் இயக்குகிறார்.

இதில் சிரஞ்சீவிக்கான ஜோடியை முடிவு செய்வதுதான் லேட்டாகி விட்டது. பலரையும் பார்த்து சரிப்பட்டு வராமல் தற்போது திரிஷாவை முடிவு செய்துள்ளனராம்.

சிரஞ்சீவியுடன் ஏற்கனவே ஸ்டாலின் படத்தில் இணைந்துள்ளார் திரிஷா. மேலும், பிரபுதேவாவின் பேவரைட் நடிகையும் கூட. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து திரிஷாவையே படத்தின் நாயகியாக்கி விட்டனர்.

இருந்தாலும் படத்தில் புக் ஆகியுள்ளாரா, இல்லையா என்பதை திரிஷா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவர்தான் நடிக்கவுள்ளதாக தெலுங்குத் திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.

தற்போது தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் அடவரி .. படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் அவருக்கு ஜோடி வெங்கடேஷ்.

பிரபு தேவாவின் இயக்கத்தில் முதலில் வெளியான நுவ்வொஸ்தாண்டே படத்தில் திரிஷாதான் நாயகி. அந்தப் படத்துக்குப் பின்னர்தான் திரிஷா தெலுங்கில் ஹாட் ஸ்டார் ஆனார்.

மகா ஹாட் திரிஷாவும், பிரபுதேவா, சிரஞ்சீவியும் இணைந்தால் சங்கர்தாதா ஜிந்தாபாத் மெகா ஹிட் என இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனராம் தெலுங்கில்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil