»   »  திரிஷாவின் சேவை

திரிஷாவின் சேவை

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது சமூக சேவையை விரிவாக மேற்கொள்ளும் வகையில் திரிஷா பவுண்டேஷன் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் திரிஷா.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ரசிகர் மன்றம் வைக்கப்பட்ட நடிகை திரிஷாதான். கடந்த ஆண்டு இந்த ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பாலாபிஷேகம், கட் அவுட், பேனர் என கலக்கி வந்த ரசிகர்களால் முதலில் திரிஷா சங்கடப்பட்டார். இருந்தாலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என்ற அறிவுரையுடன் அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

இந்த நிலையில் 4ம் தேதி திரிஷாவுக்குப் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் காலை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசி மகிழ திட்டமிட்டுள்ளார் திரிஷா.

அத்தோடு புதிதாக ஒரு அமைப்பையும் அன்று தொடங்குகிறாராம் திரிஷா. அதாவது திரிஷா பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்குகிறார் திரிஷா.

இந்த பவுண்டேஷன், ரசிகர் மன்றத்துடன் இணைந்து சமூக சேவையை மேற்கொள்ளுமாம். அடையாறு பேட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு பவுண்டேஷன் தொடக்க விழா நடைபெறுகிறது. திரிஷா தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியின்போது ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளையும் தனது பொற்கரங்களால் வழங்கவுள்ளார் திரிஷா.

ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக சேர்பவர்களிடம் பணம் எதையும் பெறப் போவதில்லையாம். மாறாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவுள்ளார்களாம்.

அதே நிகழ்ச்சியில், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அறிவிக்கவுள்ள திரிஷா, ரத்ததான முகாமையும் தொடங்கி வைக்கிறார். தனது மன்ற இணையத் தளத்தையும் தொடங்கி வைக்கிறார்.

அப்ப அடுத்தடு அரசியலா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil