»   »  விறு விறு திரிஷா பர பர புக்கிங்!

விறு விறு திரிஷா பர பர புக்கிங்!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிப்பதற்காக தனது டேட்ஸை ஃப்ரீயாக்கிக் கொண்டு, புதுப் படங்களை ஏற்காமல் இருந்த திரிஷா இப்போது மறுபடியும் படங்களை வாரிக் குவித்து வாங்கிப் போட ஆரம்பித்து விட்டார்.

2005 வரை திரிஷாவின் நிலை வேறு. அந்தக் காலகட்டத்தில் தன்னைத் தேடி எந்த வாய்ப்பு வந்தாலும் தட்டாமல் வாங்கி நடித்து வந்தார் திரிஷா. ஆனால் தமிழில் வெளியான சாமி, தெலுங்கில் வந்த நுவ்வொஸ்தாண்டே ஆகிய படங்கள் வெளியான பின்னர் திரிஷாவின் நிலையே மாறி விட்டது.

தமிழ், தெலுங்கில் அதிக பிசியான நடிகையாக மாறிப் போனார் திரிஷா. படங்கள் குவிவது ஒரு பக்கம் இருந்தாலும், சம்பளமும் மறுபக்கம் ஏறிக் கொண்டே போனது.

இப்போது தமிழில் அஜீத்துடன் கிரீடம், விக்ரமுடன் பீமா ஆகிய படங்களில் நடித்துள்ளார் திரிஷா. இரு படங்களும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இதுதவிர விஜய் நடிக்க, உதயநிதி தயாரிக்க, தரணி இயக்கும் புதிய படம் மட்டுமே திரிஷாவுக்கு கையில் உள்ளது.

தெலுங்கில் புதிதாக எந்தப் படத்தையும் அவர் ஏற்கவில்லை. இதனால் ரஜினி படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறார் திரிஷா. அதனால்தான் புதுப் படங்களை ஏற்காமல் கால்ஷீட்களை சேர்த்து வைக்கிறார் என செய்தி கிளம்பியது.

ஆனால் இப்போது திடீரென புதுப் படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம் திரிஷா.

தமிழில், ராதா மோகன் இயக்க, பிரகாஷ் ராஜ் தயாரிக்க உருவாகவுள்ள படத்தில் திரிஷா நடிக்கிறார். இது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையாம். மொழி படத்தில் ஜோதிகாவுக்கு நல்ல பெயர் கிடைத்ததது போல இப்படம் திரிஷாவுக்குப் பெயர் வாங்கித் தருமாம்.

அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை ஒப்புக் கொண்டுள்ளார் திரிஷா. ரவி தேஜாதான் நாயகன். வி.வி. விநாயக் படத்தை தயாரித்து இயக்குகிறார்.

அப்ப சூப்பர் ஸ்டார் படம் இல்லையா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil