»   »  திரிஷாவின் சோயா!!

திரிஷாவின் சோயா!!

Subscribe to Oneindia Tamil

லண்டனிலிருந்து ஆசை ஆசையாய் வாங்கி வந்த தனது நாய்க் குட்டியை, பெற்ற குழந்தை போல கண்ணும் கருத்துமாக பராமரித்துப் பார்த்துக் கொள்கிறாராம் திரிஷா.

தென்னிந்திய திவ்ய தேவதையான திரிஷாவுக்கு விலங்குகள் மீது கொள்ளைப் பிரியம். அந்தப் பாசம் குப்பென அதிகரித்து குபீரனெ பீரிட்டு எழுந்துள்ளதாம். எல்லாவற்றுக்கும் சோயாதான் காரணம். இந்த சோயா, பீன்ஸ் வகை அல்ல, லொள் லொள் ரகம்.

சமீபத்தில் லண்டனுக்குச் சென்ற போது இந்த அழகான நாய்க் குட்டியை வாங்கினாராம் திரிஷா. இந்த குட்டிக்காக, தனது வீட்டு வளாகத்தில் அழகான குட்டி வீட்டை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம். இரவெல்லாம் சோயா, இந்த குட்டிக் குடிலுக்குள்தான் வாசம் செய்கிறதாம்.

வீட்டில் இருக்கும்போதெல்லாம் தானே இந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்கிறாராம் திரிஷா. இதுதவிர சோயாவுக்கென ஒரு ஸ்டாஃபும் நியமிக்கப்பட்டுள்ளார். சோயாவைப் பார்த்துக் கொள்வது மட்டுமே அவரது பணியாம்.

தினசரி சிறிது நேரமாவது சோயாவுடன் கொஞ்சாமல் போனால் திரிஷாவுக்கு அந்த நாளே சரியில்லாமல் போய் விடுமாம்.

சோயாவை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்தும் டிப்ஸ்களும் வாங்கியுள்ளாராம் திரிஷா. இதுதவிர சமீபத்தில் ஹைதராபாத்தில் நடிகை அமலாவைப் போய்ப் பார்த்து அவரிடமிரும் பெர்சனலாக சில அட்வைஸ் பெற்றுக் கொண்டாராம்.

பெத்த குழந்தை போல திரிஷா, சோயாவைப் பார்த்துக் கொள்வதைப் பார்த்து அவரது தாயார் உமா கிருஷ்ணன் பூரித்துப் போயுள்ளாராம்.

கொடுத்து வச்ச சோயா!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil