»   »  திரிஷா கோவில் டமால்

திரிஷா கோவில் டமால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய தேவதை திரிஷாவுக்கு ஆந்திராவில் கட்டப்பட்ட கோவில் இடித்துத் தள்ளப்பட்டு விட்டது.

தமிழிலும், தெலுங்கிலும் அட் ஏ டைவில் அதிரடியாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகை திரிஷா. அவர் நடிக்கும் படங்கள் ஹிட் ஆகி விடுவதால் திரிஷாவுக்கு டிமாண்ட் இன்னும் குறையவில்லை.

நடிகர்களைப் போலவே திரிஷாவுக்கும் ரசிகர் மன்றங்கள் எக்கச்சக்கமாக பெருகி விட்டன. தமிழகத்திலும், ஆந்திராவிலும் ஆயிரக்கணக்கான மன்றங்கள் உள்ளதாம் திரிஷாவுக்கு.

ரத்ததானம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொண்டுகளை இந்த ரசிகர் மன்றங்கள் செய்து வருகின்றன. கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சிவசப்பட்ட ஆந்திர ரசிகர்கள் திரிஷாவுக்கு கோவிலே கட்டி அசத்தினர் (திருச்சியில் குஷ்புவுக்கு கோவில் கட்டியதைப் போல)

ராஜமுந்திரி அருகே இந்த கோவில் கடந்த மாதம் கட்டப்பட்டது. திரிஷாவின் தீவிர ரசிகர் ஒருவர்தான் இந்தக் கோவிலை கட்டினார். தன்னந்தனி மனிதராக கோவில் கட்டி வந்த இந்த ரசிகர், பாதி கோவிலைக் கட்டிய நிலையில் பிறரின் நிதியுதவியையும் கோர தீர்மானித்தார்.

இதையடுத்து உண்டியல் ஏந்தாத குறையாக பலரிடமும் போய் நித வசூலிக்கத் தொடங்கினார். முதலில் ரசிகர்களிடம் நிதி வசூலித்தார். பின்னர் பொதுமக்களிடமும் பணம் கேட்க ஆரம்பித்தார்.

இவரின் செயலால் அதிருப்தியுள்ள திரிஷாவின் ரசிகர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் திரிஷா கோவிலுக்கு விரைந்து சென்றனர். கோவில் கட்டக் கூடாது என்று அந்த ரசிகருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கோவிலும் இடித்துத் தள்ளப்பட்டு விட்டது.

அடடா, ஒரு பக்தனின் கனவை போலீஸ் தகர்த்து விட்டதே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil