»   »  த்ரிஷா.. அம்மா..

த்ரிஷா.. அம்மா..

Posted By:
Subscribe to Oneindia Tamil

த்ரிஷாவில் காட்டில் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அம்மணிக்கு தமிழிலும் தெலுங்கிலும் கால்ஷீட் வழங்கிமாளவில்லை. இதனால் கூரையைப் பொத்துக் கொண்டு துட்டும் கொட்டுகிறது.

என்ன செய்வார்? ஆங்காங்கே பங்களாக்களை விலைக்கு வாங்கிப் போட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வாங்கியது, சென்னைபோயஸ் கார்டனில் உள்ள மாபெரும் பங்களாவை. இரண்டு பெரிய நோட்டுகளைக் கொடுத்து இந்த மாபெரும் வீட்டைவாங்கிப் போட்டிருக்கிறாராம்.

முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம், ரஜினியின் வீடுகள் உள்பட சிட்டியின் பெரும் விவிஐபிக்களின் வீடுகள்அமைந்துள்ள இப் பகுதியில் பெரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே வீடு, நிலம் வாங்க முடிகிற அளவுக்கு மிகக் காஸ்ட்லியானஏரியா இது. இதில் த்ரிஷாவும் ஒரு அசெட்டை வாங்கிப் போட்டுவிட்டார்.

இதே போல ஹைதராபாத்திலும் முக்கிய இடங்களில் கட்டடங்களில் தனது முதலீட்டை போட்டுள்ளாராம் த்ரிஷா.

இப்போது விஜய்யின் 40வது படமான திருப்பாச்சியில் நடித்துக் கொண்டே ஹைதராபாத்துக்கும் பறந்து போய் தெலுங்கில் 3படங்களில் மாட்லாடிவிட்டு வருகிறார். மேலும் பிரபுதேவா இயக்க இருக்கும் ஒரு தெலுங்குப் படத்திலும் புக் ஆகி இருக்கிறார்.ஜெயம் ரவியோடு ஒரு தமிழ் படம் செய்யப் போகிறார்.

இந்த உடம்பை வைத்துக் கொண்டே த்ரிஷா காட்டும் அசத்தல் கவர்ச்சி ரசிக சிகாமணிகளுக்கும் ரொம்பவே பிடித்துப்போய்விட்டதால் லட்சங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள் டோலிவுட்காரர்கள்.

ஆனால், அவர்களுக்கு அள்ளித் தர கால்ஷீட் தான் இல்லை த்ரிஷாவிடம். கால்ஷீட் இல்லாததால் ரூ. 40 லட்சம் வரை வருமானம்வரும் மூன்று படங்கள் அவரைவிட்டுப் போய்விட்டன.

அதே நேரத்தில் தமிழில் அடக்கமான ரோல்களைச் செய்து தெலுங்கைவிட கொஞ்சம் (கொஞ்சம்தான்) சம்பளம் குறைவாகவேகொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்.

இதற்கிடையே த்ரிஷாவின் அம்மாவையும் கோலிவுட்டில் இழுத்து விட சில இயக்குனர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்துவருகின்றனர்.

த்ரிஷாவிடன் சில நேரங்களில் சூட்டிங்குக்கு வரும் இவரைப் பார்த்தால் யாரும் அம்மா என்று சொல்ல மாட்டார்கள். த்ரிஷாவின்தோழி அல்லது சகோதரி என்று தான் சொல்ல முடியும். அவ்வளவு அழகிய அம்மா இவர்.

இவரை நடிக்க வைக்க பல தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் வலை வீசியும் இதுவரை யாருக்கும் அவர் மசியவில்லை என்பதுதான் முக்கியமான செய்தி.

சென்னையில் இருக்கும்போது இருவரும் த்ரிஷாவும் அம்மாவும் மாலை வேளைகளில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 5நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துவிடுகிறார்களாம்.

ஹோட்டலின் ஹை-டெக் ஜிம்முக்குச் சென்று இருவரும் சேர்ந்தே உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, அப்படியே பாருக்குள் நுழைந்துஇருவரும் ஒருவருக்கு ஒருவர் கம்பெனி கொடுத்துக் கொண்டே தண்ணி அடிப்பதைப் பார்க்க முடியும் என்கின்றனகோடம்பாக்கம் பட்சிகள்.

அதே போல த்ரிஷா குறித்து இன்னொரு கிசுகிசுவும் சூடாகப் பரவிக் கிடக்கிறது. தெலுங்கு ஹீரோ பிரபாஸ் என்பவருக்கும்த்ரிஷாவுக்கும் ஒரு இதுவாம்.

இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மையோ தெரியவில்லை...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil