»   »  திரிஷா ஆப்சென்ட், ஷ்ரியா பிரசன்ட்!

திரிஷா ஆப்சென்ட், ஷ்ரியா பிரசன்ட்!

Subscribe to Oneindia Tamil

டாக்டர் பட்டம் வாங்கியதற்காக நடிகர் விஜய் கொடுத்த பார்ட்டியில் திரிஷா கலந்து கொள்ளவில்லை. ஆனால் அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரியா பங்கேற்றார்.

சென்னை ஜெமினி மேம்பாலத்திற்கு கீழே உள்ள அழகிய ஸ்டார் ஹோட்டலான ஹோட்டல் பார்க்கின் ரூஃப் டாப் நீச்சல்குளம் களேபரமாக காணப்பட்டது. ரம்யமான அந்த மாலை நேரத்தில் படு வண்ணமயாக காணப்பட்ட அந்தக் காட்சி நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியாகும்.

தமிழ் சினிமாவைத் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் முன்னணி இளம் நடிகர்கள், நடிகைகள் கிட்டத்தட்ட அத்தனை பேரும் (அஜீத் தவிர) அங்கு கூடியிருந்தனர்.

சமீபத்தில் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திடமிருந்து கெளரவ டாக்டர் பட்டம் பெற்றதற்காக விஜய் கொடுத்து பார்ட்டி அது.

விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரையும் அந்தப் பக்கம் அனுமதிக்கவில்லை. குறிப்பாக பத்திரிக்கைக்காரர்கள் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்து விடாதபடி படு கவனமாக இருந்தனர்.

தனது மனைவி சங்கீதாவுடன் விஜய் பார்ட்டியில் கலந்து கொண்டாராம். ஷ்ரியா இந்த விருந்தில் முக்கியப் புள்ளியாக இடம் பெற்றார். படு கவர்ச்சியாக வந்த அவரைப் பார்த்து அத்தனை பேரும் கண் கொட்டாமல் பார்த்து வியந்தனராம்.

மாலையில் தொடங்கிய பார்ட்டி நள்ளிரவைத் தாண்டியும் நீடித்ததாம். விருந்து முடியும் வரை ஷ்ரியாவும் இருந்து மகிழ்ந்தாராம்.

இவர் தவிர ரீமா சென், நயனதாரா, விக்ரம், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், உதயநிதி, விஷால் ஆகியோரும் பார்ட்டிக்கு வந்து விஜய்யைக் கெளரவப்படுத்தியுள்ளனர். ஆனால் திரிஷா மட்டும் பார்ட்டிக்கு வரவில்லையாம்.

விஜய்யின் அடுத்த படமான குருவியிலிருந்து திரிஷாவைத் தூக்கி விட்டதால் கோபமடைந்தே அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்த பார்ட்டி படு அமைதியாக நடந்து முடிந்ததாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil