»   »  மீடியா நண்பர்களே, ரசிகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்: ட்வீட்டிய த்ரிஷா

மீடியா நண்பர்களே, ரசிகர்களே என்னை மன்னித்துவிடுங்கள்: ட்வீட்டிய த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாயகி படத்தை விளம்பரப்படுத்தாமல் இருந்ததற்காக த்ரிஷா மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள பேய் படம் நாயகி. படம் இன்று தமிழகத்தில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் பேட்டி அளித்தாரே தவிர த்ரிஷா அது பற்றி வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் ரசிகர்கள் த்ரிஷாவை கேள்வி மேல் கேட்கத் துவங்கினர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நாயகி படத்தின் முடிவு த்ரிஷாவுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. அதனால் தான் அவர் வீணாக அதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அமைதியாக உள்ளார் என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

மன்னிப்பு

ரசிகர்கள் கேள்வி கேட்பதை பார்த்த த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் ஒரு படத்தை பற்றி பேசாமல், அதை விளம்பரப்படுத்தாமல் இருந்தால் அதற்கு காரணங்கள் இருக்கும். என்னிடம் கேள்விகள் கேட்கும் மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷா

இது குறித்து விரைவில் முறையாக விளக்கம் அளிக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி என்று த்ரிஷா ட்வீட்டியுள்ளார்.

கொடி

கொடி

த்ரிஷா தற்போது தனுஷுடன் சேர்ந்து கொடி படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Trisha has appologised to media and fans who asked her as to why she didn't promote her film Nayaki.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil