»   »  வரலட்சுமியை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு- த்ரிஷா

வரலட்சுமியை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு- த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் தன்னலமற்ற நடிப்பைப் பார்த்து தான் பெருமைப்படுவதாக நடிகை த்ரிஷா பாராட்டியிருக்கிறார்.

பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தாரை தப்பட்டை. இளையராஜாவின் 1௦௦௦ மாவது படமாக வெளியான தாரை தப்பட்டையில் சசிகுமாருடன் இணைந்து வரலட்சுமி நடித்திருந்தார்.

இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி போனில் நடிகை வரலட்சுமியை அழைத்துப் பாராட்டி இருந்தார். இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் வரலட்சுமியைப் பாராட்டி இருக்கிறார்.

வரலட்சுமியின் நடிப்பு குறித்து த்ரிஷா "டார்லிங் வரூ, நான் உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கவில்லை என்றால் தாரை தப்பட்டை படத்தில் உன் தன்னலமற்ற நடிப்பைப் பார்த்து லேசாக பொறாமைப்பட்டிருப்பேன்.

ஆனால் இப்போது உன் நடிப்பை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்" என்று 'சூறாவளி' வரலட்சுமியின் நடிப்பை த்ரிஷா புகழ்ந்திருக்கிறார்.

த்ரிஷாவின் இந்தப் பாராட்டால் மகிழ்ந்து போன வரலட்சுமி த்ரிஷாவிற்கு தனது நன்றிகளை தெரிவித்திருக்கிறார். தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியின் நடிப்பை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Trisha Appreciate Varalakshmi Acting in Tharai Thappattai. She wrote on Twitter "My darling varusarath if i didnt love u so much i would probably be a wee bit envious of such selfless performing in TT so proud so proud".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil