»   »  15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்!

15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்.

1999-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த த்ரிஷா, 2002-ம் ஆண்டு தனி கதாநாயகியாக உயர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டு அவர் நடித்த சாமி அவரை முதல் நிலை நாயகியாக்கியது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

2003-ம் ஆண்டு அவர் தெலுங்கில் அறிமுகமானார். பிரபு தேவா இயக்கிய நுவ்வொஸ்தானன்டே நேனொத்தன்டானா படத்தில் நடித்த பிறகு தெலுங்கிலும் முன்னணி நடிகையானார்.

50 படங்கள்

50 படங்கள்

இந்த 15 ஆண்டுகளில் 50 படங்களை முடித்துவிட்டார் த்ரிஷா. இந்த 2015-லும் அவர் கைவசம் 6 படங்கள் உள்ளன. தெலுங்கில் இரு படங்களில் நடிக்கிறார்.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

திருமண நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாக செய்தி வெளியானதிலிருந்து அவருக்கு மேலும் மேலும் புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன. கமலின் அடுத்த படத்திலும் இவர்தான் நாயகி என்கிறார்கள்.

15 ஆண்டுகள்

15 ஆண்டுகள்

பொதுவாக இப்போதைய சினிமாவில் வெற்றிகரமான நாயகிகளின் ஆயுள் காலமே 5 அல்லது 6 ஆண்டுகள்தான். ஆனால் த்ரிஷாவோ 15 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார்.

நாய்கள் மீது தனிப் பாசம்

நாய்கள் மீது தனிப் பாசம்

நடிப்பைத் தாண்டி, விலங்குகள் மீது தனிப் பிரியம் த்ரிஷாவுக்கு. ஏகப்பட்ட நாய்களைத் தத்தெடுத்துள்ள அவர், விலங்குகள் மீது அன்பு செலுத்த பிரச்சாரம் செய்கிறார்.

31வது

31வது

இன்று அதிகப் படங்களில் நடிக்கும் மகிழ்ச்சியுடன் தனது 31வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நண்பர்களுடன் இந்த பிறந்த நாளைக் கழிக்கிறார் த்ரிஷா.

English summary
Leading actress Trisha is celebrating her 31st birthday today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil