»   »  'சொந்த குரல்' திரிஷா!

'சொந்த குரல்' திரிஷா!

Subscribe to Oneindia Tamil
Trisha
தமிழச்சியாக இருந்தும் கூட இதுவரை சொந்தக் குரலில் பேசி நடிக்காத திரிஷா, தனது திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக அபியும் நானும் படத்தில் தனது சொந்தக் குரலில் பேசப் போகிறாராம்.

பாலக்காட்டில் பிறந்த தமிழ்ப் பெண் திரிஷா. தமிழ் பேசத் தெரிந்தாலும் கூட அவர் இதுவரை அதிகம் பேசி வருவது ஆங்கிலம்தான். கலிபோர்னியா கிளி போல வாயைத் திறந்தாலே ஆங்கிலம்தான் அலட்டும். எப்போதாவது தமிழையும் கொஞ்சம் போல பேசி வைப்பார் திரிஷா.

திரைப்படங்களிலும் இதுவரை அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக அபியும் நானும் படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறாராம் திரிஷா.

ராதா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் - மோசர் பெயரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம்தான் அபியும் நானும். இப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறாராம் திரிஷா. பிருத்விராஜும் படத்தில் இருக்கிறார். திரிஷாவின் அம்மா கேரக்டரில் ஐஸ்வர்யா நடிக்கிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையான இப்படத்தில் சொந்தக் குரலில் பேசப் போகிறார் திரிஷா. தனது கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்திருப்பதால்தான் சொந்தக் குரலில் பேச முடிவு செய்தாராம் திரிஷா. சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தால்தான் விருது கிடைக்கும் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்திலும் சொந்தக் குரலில் பேச முடிவு செய்துள்ளாராம் திரிஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil