»   »  17 வருஷமாச்சு, ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையே: த்ரிஷா வருத்தம்

17 வருஷமாச்சு, ஆனால் அந்த ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையே: த்ரிஷா வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த ஒரேயொரு விஷயம் மட்டும் நடக்கவே இல்லை என்று வருத்தப்படுகிறார் த்ரிஷா.

த்ரிஷா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்த த்ரிஷா பின்னர் ஹீரோயின் ஆனார். இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரயினாக இருந்து வருகிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல.

இந்நிலையில் தனது திரையுலக வாழ்க்கை பற்றி அவர் கூறுகையில்,

ரஜினி

ரஜினி

எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் உள்ளது. நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. யாருக்கு தான் அவருடன் நடிக்க ஆசை இருக்காது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் நல்ல படங்களில் நடித்து வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஆசி

ஆசி

நான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக இருப்பது பற்றி பலர் கேட்கிறார்கள். நடிப்பது தான் என் தொழில். வேறு யாரும் இப்படி இத்தனை ஆண்டுகளாக ஹீரோயினாக இல்லை என்று கூறுவதை பார்க்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

நடிப்பு

நடிப்பு

மாடலிங் செய்தபோது படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறினேன். அதன் பிறகு எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். தற்போது நான் வாழ்க்கையின் போக்கில் செல்கிறேன்.

ராணா

ராணா

அண்மையில் நடந்த விருது விழாவில் த்ரிஷாவும், அவரது முன்னாள் காதலர் ராணாவும் சந்தித்துக் கொண்டதுடன் நன்றாக பேசிக் கொண்டனர். இது குறித்து த்ரிஷாவிடம் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க மாட்டேன் என்றார்.

English summary
Actress Trisha, who has woven a successful career for herself in the competitive world of Tamil cinema, is largely happy about how things have panned out in the last 17 years since her debut. But the 33-year-old has just one regret.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil