»   »  என்னை ஏமாற்றி விட்டார் இயக்குநர் ஆதிக்… நடிகை ஆனந்தி காட்டம்

என்னை ஏமாற்றி விட்டார் இயக்குநர் ஆதிக்… நடிகை ஆனந்தி காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்ணியமான என கதாபாத்திரத்தை கெடுத்துவிட்டார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் நடித்த ஆனந்தி குற்றம் சாட்டியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னிடம் சொன்ன கதையை படமாக்கவில்லை என்றும் ஆனந்தி புகார் கூறியுள்ளது பரபரப்பை எற்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். ஜெயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.


இரட்டை அர்த்த வசனங்கள் தூக்கலாக இருப்பதால் படத்திற்கு ‘ஏ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தாலும், பெண்கள் பலரும் படத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்கும், காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.


ஆனந்தி புகார்

ஆனந்தி புகார்

திரைப்படத்தின் நாயகி ஆனந்தியும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். "இயக்குநர் ஆதிக் என்னிடம் சொன்ன கதையைப் படமாக்கவில்லை. கொடுக்கப்பட்ட வசனங்களும், படமாக்கப்பட்ட காட்சிகளும் வித்தியாசமாக இருந்ததால், ஏன் இப்படி? என்று கேட்டேன். அதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.


ஏமாற்றிவிட்டார் ஆதிக்

ஏமாற்றிவிட்டார் ஆதிக்

முதலில் நான்தான் முதன்மை நாயகி என்றும், வேறொரு நாயகியும் இருப்பார் என்றும் சொன்னார். போஸ்டர்களில், 2 நாயகிகள் நடித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.


அடுக்கும் ஆனந்தி

அடுக்கும் ஆனந்தி

கதை மாற்றம், பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாதது, இரட்டை அர்த்த வசனங்கள், க்ளைமாக்ஸ் காட்சியை சொன்னபடி படமாக்காதது என, இயக்குனர் ஆதிக் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ஆனந்தி.


மன உளைச்சல்

மன உளைச்சல்

‘கயல்', ‘சண்டி வீரன்' படங்களில் எனது பாத்திரம் கண்ணியமாக இருந்தது. அதைக் கெடுப்பது போல், இதில் என் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது.


திட்டிய இயக்குநர்

திட்டிய இயக்குநர்

சில நாட்களுக்கு முன்பு ஏன் இப்படி செய்தீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டபோது தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார்" என்றும் இயக்குநர் ஆதிக் மீது புகார்களை அடுக்கியுள்ளார் ஆனந்தி.


நடிப்பா? நிஜமா

நடிப்பா? நிஜமா

படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே இயக்குநரும் கதாநாயகி ஆனந்தியும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதிக்கொண்டனர். இது படத்தின் விளம்பரத்திற்காக இருவரும் அடிக்கும் ஸ்டண்ட் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ஆனந்தி.


அதுக்குள்ளே இப்படியா?

அதுக்குள்ளே இப்படியா?

ஆனந்தி நடித்த கயல், சண்டி வீரன் ஆகிய இரண்டு படங்களுமே சுமாராகத்தான் போனது. மூன்றாவது படத்திலேயே இயக்குநரிடம் மல்லுக்கு நிற்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


English summary
Trisha Illa Nayanthara heroine Anandhi attacks Director Adhik started fighting with each other. This fight started verbally and it lead to physical fight later.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil