»   »  'மதுர' மாதேஷின் இயக்கத்தில் மீண்டும் பேயாக மாறும் திரிஷா?

'மதுர' மாதேஷின் இயக்கத்தில் மீண்டும் பேயாக மாறும் திரிஷா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நாயகி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேய் படத்தில் திரிஷா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

13 வருடங்கள் தாண்டியும் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா, தற்போது 'நாயகி' என்ற திகில் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர தனுஷின் 'கொடி', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'போகி' ஆகிய படங்களும் திரிஷா கைவசம் உள்ளன. இந்நிலையில் 'மதுர' இயக்குநர் மாதேஷ் இயக்கும் புதிய படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Trisha Join Hands with Madhesh

இதுவும் 'நாயகி' போல திகில் படம்தான் எனவும், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் இருந்து துவங்கும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் ''முதன்முறையாக ஒரு திகில் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறோம். இது மிகவும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

இப்படத்தில் 4 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said After Nayagi Trisha Team Up with Madesh for Her Next.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil