»   »  6 கிலோ எடையைக் குறைத்து 20 வயதுப் பெண்ணாக மிளிரும் திரிஷா

6 கிலோ எடையைக் குறைத்து 20 வயதுப் பெண்ணாக மிளிரும் திரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் நடித்து வரும் பேய்ப்படம் ஒன்றிற்காக தனது எடையை 6 கிலோ குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகை திரிஷா.

விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் தான் படத்திற்குப் படம் தங்களது கதாபாத்திரத்திற்குத் தக்க தங்களது எடையைக் கூட்டி குறைத்து நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் பட்டியலில் நடிகைகளும் சேர்ந்து விட்டனர்.

அனுஷ்கா தனது புதிய படத்திற்காக தனது எடையைக் கூட்டிப் பின் குறைக்க உள்ளார். அந்த வகையில், தற்போது திரிஷாவும் தெலுங்குப் படம் ஒன்றிற்காக தனது எடையைக் குறைத்து, கூட்ட இருக்கிறார்.

சினிமா மட்டுமே...

சினிமா மட்டுமே...

திருமணம் நின்றதைத் தொடர்ந்து, சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நடிகை திரிஷா. நடிகையாகவே வாழவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கை நிறைய படங்கள்...

கை நிறைய படங்கள்...

தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், சுந்தர் சியுடன் அரண்மனை 2 மற்றும் கமலுடன் ஒரு படம் என நடித்து வரும் திரிஷா தெலுங்கிலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

காமெடி பேய்ப்படம்...

காமெடி பேய்ப்படம்...

அதில் ஒன்று கோவர்தன் இயக்கத்தில் நாயகி. காமெடி கலந்த பேய் படமாக வளர்ந்து வரும் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திரிஷா. அதில் ஒன்று 20 வயதுப் பெண் கதாபாத்திரம்.

எடையைக் குறைத்து...

எடையைக் குறைத்து...

இதற்காக தனது எடையில் 6 கிலோவை அவர் குறைத்து வருகிறார். பின்னர் மற்றொரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடையைக் கூட்ட இருக்கிறாராம்.

புதிய அவதாரம்...

புதிய அவதாரம்...

இப்படி ஒரே படத்தில் எடையே குறைத்து, கூட்டுவதால் த்ரிஷாவை புதிய அவதாரத்தில் பார்க்கலாம் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

English summary
Close on the heels of Anushka, Trisha too would be seen losing and putting on weight for her role in her forthcoming bilingual film Nayaki, directed by Govardhan. Sources say that the petite actress will be seen in two shades in the horror comedy, including that of a 20yr old girl.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil