»   »  குதிரைக்குக் குரல் கொடுப்பார்.. ஜாதி ஆணவக் கொலையைக் கண்டுக்க மாட்டார்.. திரிஷாவை வறுக்கும் ரசிகர்கள்

குதிரைக்குக் குரல் கொடுப்பார்.. ஜாதி ஆணவக் கொலையைக் கண்டுக்க மாட்டார்.. திரிஷாவை வறுக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குதிரைக்கு எதிராக குரல் கொடுக்கும் திரிஷா கவுரக் கொலைக்கு எதிராக கருத்து தெரிவிக்காதது ஏன்? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி போலி குதிரை ஒன்றின் காலை அடித்து உடைப்பது போல வீடியோ ஒன்று வெளியானது.

 Trisha no Voice in Recent Murder

அவரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் தொடர் கண்டனங்கள் எழுந்த நிலையில் நடிகை திரிஷாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

பாஜக எம்எல்ஏ

பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தலைமையில் டேராடூனில் போராட்டம் நடந்தது. போராட்டத்தைக் கட்டுபடுத்த போலீஸ் தங்கள் குதிரைகளுடன் வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் போலீஸ்காரர் அமர்ந்திருந்த குதிரை ஒன்றை கணேஷ் ஜோஷி அடிப்பது போன்றும், இதனால் குதிரை கால் முறிந்து கீழே விழுவது போலவும் வீடியோ வெளியானது.

திரிஷா

இந்த வீடியோவால் நாடு முழுவதுமிருந்து கணேஷ் ஜோஷிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதற்கு நடிகை திரிஷா " குதிரையின் காலை உடைத்த அந்த எம்எல்ஏவை நரகத்தில் எரிய வேண்டும்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

கவுரவக்கொலை

அதே நேரம் தமிழ்நாட்டில் நடைபெற்ற கவுரவக் கொலை குறித்து திரிஷா கருத்து தெரிவிக்கவில்லை. இதனைக் கண்ட ரசிகர்கள் குதிரைக்கு குரல் கொடுக்கும் நீங்கள் கவுரவக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்? என்று கேள்விகள் எழுப்பியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு

இதேபோல ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது திரிஷா பீட்டா அமைப்பிலிருந்து விலகவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் தமிழர் அமைப்புகள் திரிஷாவுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
Why Trisha not Opinion Against the Murder? Fans Raised Questions in Social Networking Sites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil