»   »  ஹஸ்பெண்ட் சரியில்லாவிட்டால்சஸ்பெண்ட் - திரிஷா அதிரடி!

ஹஸ்பெண்ட் சரியில்லாவிட்டால்சஸ்பெண்ட் - திரிஷா அதிரடி!

Subscribe to Oneindia Tamil

கல்யாணம் செய்து விட்டதால் கணவனுக்கு ஒரு பெண் அடிமையாகி விட முடியாது. எனக்குப் பிடித்த மாதிரி கணவன் இல்லாவிட்டால் அந்த திருமண பந்தத்தையே தூக்கி எறிந்து விடுவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் திரிஷா.

திரிஷா ஜில் நடிகை மட்டுமல்ல, தில் பெண்மணியும் கூட. சுதந்திரத்தை மட்டுமே அவர் முக்கியமாக கருதுவார். தனது சுதந்திரத்திற்கு எதிராக எது நின்றாலும், அதை தூக்கிப் போட்டு மிதித்து ஏறிச் செல்பவர்.

பிசியான சினிமா ஷெட்யூலுக்கு இடையே, தோழர், தோழியரோடு அரட்டை, வீக் என்ட் பார்ட்டி என ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் திரிஷா இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லையாம். கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அம்மா உமா சில முறை கேட்டபோதும் கூட, இன்னும் மூடு வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேனே என்று கூறியுள்ளாராம்.

அம்மாவின் முழு பாதுகாப்பில், முழு சுதந்திரத்தில் சிறகடித்துப் பறந்து வரும் திரிஷாவுக்கு, ஆணாதிக்கம் என்றாலே ஆகாதாம். அதிலும், மனைவி என்ற முறையில் பெண்களை அடக்கி ஆள நினைப்போரைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வருமாம்.

ஏன் இந்த வெறி என்று திரிஷாவிடம் கேட்டபோது, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை கிடையாது. ஆண்களுக்கு என்ன சுதந்திரம் எல்லாம் இருக்கிறதோ, அது பெண்களுக்கும் பொருந்தும்.

கல்யாணமாகி விட்டால் ஆண்களுக்கு பெண்கள் அடிமை, புருஷன் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று கிடையாது. அப்படி அடிமையாக இருந்துதான் ஆக வேண்டும் என்றால் அப்படி ஒரு கல்யணமே தேவையில்லை.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஜாலியாக, சந்தோஷமாக வாழ்வதற்குத்தான் கல்யாணம். என்னைப் பொருத்தவரை என்னை அடக்கி ஆள எனது கணவர் நினைத்தால் நான் அந்த பந்தத்தையே தூக்கி எறிந்து விடுவேன் என்றார் அதிரடியாக.

சரி மேட்டர் படு ஹாட்டாக இருக்கிறதே என்று திரிஷாவை திசை திருப்பினோம். ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளதே என்றோம். ஆமாம், சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் கலைமாமணி விருது கிடைத்துள்ளது. அதேபோல நந்தி விருது கிடைத்துள்ளது.

இரண்டு மாநில அரசுகளின் விருதும் ஒரே சமயத்தில் கிடைத்திருப்பது பரம சந்தோஷமாக இருக்கிறது. நான் நடித்த அத்தடு மாபெரும் ஹிட் படமாகும். அது தமிழில் நந்து என்ற பெயரில் டப் ஆகி அதுவும் வெற்றி பெற்றது இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது என்றார்.

திரிஷாவின் தோழர்களான வந்தனா, ஸ்ரீகாந்த் விவகாரம் குறித்து திரிஷா வாயைக் கிளறினோம். இருவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள். தங்களது பல விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

அது சரி திரிஷா, செளகார் ஜானகி, சரோஜா தேவி, சாவித்ரி மாதிரி யாரும் நடிக்க மாட்டேன் என்கிறீர்களே ஏன் என்று தெரியாத்தனமாக கேட்டு விட்டோம். நடிக்க மாட்டோம் என்று யார் சொன்னது என்று சண்டைக்கே வந்து விட்டார்.

எங்களுக்கும் அவர்களைப் போல கனமான வேடங்களைக் கொடுத்துப் பாருங்கள், பின்னி எடுத்துக் காட்டுகிறோம் என்று சவால் விட்டார்.

கூல் டவுன் என்று கூறி விட்டு, உங்களைப் பற்றி நிறைய கிசுகிசு, கசமுசா சமாச்சாரங்கள் வருகிறதே, டென்ஷன் ஆக மாட்டீர்களா என்று கொஞ்சமாக நூல் விட்டோம்.

ஸ்டார் ஆகி விட்டாலே இதெல்லாம் பின்னாடியே வரும்தான். நான் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. கவலைப்பட மாட்டேன். எனது அம்மாவிடமே அதுகுறித்து பேசுவேன். எனது தாய் என்னை ஒரு சாதாரணப் பெண்ணாக வளர்க்கவில்லை. மன தைரியம் மிக்க மாதாகத்தான் வளர்த்துள்ளார். ஸோ, இதெல்லாம் என்னை அசைக்க முடியாது என்றார்.

திரிஷாவுக்கு படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் நடித்தது போல வில்லத்தனம் காட்டி வெளுத்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். நிச்சயம் இந்த ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

நடக்கட்டும், நடக்கட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil