»   »  மாதேஷின் 'மோகினி'யில் சமையற்கலைஞராக மாறிய திரிஷா!

மாதேஷின் 'மோகினி'யில் சமையற்கலைஞராக மாறிய திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகினி படத்தில் திரிஷா சமையல் கலைஞராக நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'நாயகி' படத்தைத் தொடர்ந்து திரிஷா 'மதுர' மாதேஷ் இயக்கத்தில் 'மோகினி'யாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டன் பகுதியில் நிறைவடைந்துள்ளது.

படக்குழு அடுத்ததாக தாய்லாந்து பகுதிகளில் படப்பிடிப்பினை நடத்தவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Trisha Play a Foreign Chef

திரிஷா இப்படத்தில் முதன்முறையாக சமையல் கலைஞராக நடிக்கிறார். லண்டனில் உணவகம் நடத்தும் பெண்ணாக இவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக சமையல் கலைஞர்களிடம் திரிஷா முறையான சமையல் பயிற்சி பெற்று நடித்து வருகிறார். குறிப்பாக அவர்களின் முக பாவனை, உடல் அசைவுகள் குறித்து அவர் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.

Trisha Play a Foreign Chef

தற்போது திரிஷா சமையல் கலைஞராக நடிக்கும் காட்சிகளை படம் பிடித்துள்ளனர். அடுத்ததாக அவர் பேயாக வருவது போன்ற காட்சிகளை படம்பிடிக்கவுள்ளனர்.

இந்தியில் வெற்றி பெற்ற 'குயின்' படத்தில் திரிஷாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Trisha Play a Foreign Chef in Mohini.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos