»   »  நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவிடம் வந்த 'குயின்'

நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவிடம் வந்த 'குயின்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த படம் 'குயின்'. திருமணத்திற்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில் திருமணம் வேண்டாமென்று மணமகளிடம், மணமகன் கூறிவிடுகிறான்.

மணமகன் நிராகரிப்பிற்குப் பின் மணமகள் எடுக்கும் அதிரடி முடிவுதான் படத்தின் கதை. ஒரு படம் ஹிட்டடித்தால் அதனை உடனே வாங்கி விடுவது வழக்கம் தானே.

Trisha in Queen Remake?

அந்த வகையில் இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமையை இயக்குநர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார். முதலில் நயன்தாரா இப்படத்தின் நாயகியாக நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது.

அடுத்து பிரசாந்த்-கங்கனா நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது திரிஷாவின் பெயர் அடிபட்டு வருகிறது.

நயன்தாரா வழியில் திரிஷாவும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இதனால் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Trisha Play a Key Role in Queen Tamil Remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil