»   »  மோகினி அவதாரமெடுக்கும் நாயகி த்ரிஷா!

மோகினி அவதாரமெடுக்கும் நாயகி த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேய்ப் படங்களின் மீது அதீத காதல் வந்துவிட்டது த்ரிஷாவுக்கு. அடுத்தடுத்து வரிசையாக பேய் மற்றும் த்ரில்லர் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இயக்குநர் மாதேஷ் அடுத்து இயக்கும் மோகினி என்ற படத்தில் த்ரிஷாதான் கதாநாயகி.

Trisha's third horror film Mohini

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை ஹாரி பாட்டர் படத்தில் பணியாற்றிய குழு வடிவமைக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. பிறகு,தாய்லாந்து, மெக்ஸிகோ போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

த்ரிஷா ஏற்கெனவே அரண்மனை 2, நாயகி என இரு பேய்ப்படங்களில் நடித்துள்ளார். இது அவரது மூன்றாவது பேய்ப்படம். பேய்ப் படங்களில் நடிப்பது ஜாலியாக இருப்பதால் இந்த வகைப் படங்களில் தொடர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் த்ரிஷா.

English summary
Actress Trisha is playing lead role in another horror flick titled Mohini.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil