திருமணம் ஓகே.. ஹனிமூன் எப்போ பாஸ்?.. அதிரடியாக கேள்வி கேட்ட திரிஷா.. என்ன மேடம் இது?

சென்னை: நடிகை திரிஷா 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். கடைசியாக அவர் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க அவருக்கு வயது 40க்கு மேல் ஆனாலும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக ஒரு தகவல் சமீபத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஜோடி படத்தில் சின்ன ரோலில் நடித்து பிறகு லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் திரிஷா. முதல் சில படங்களிலேயே அவர் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். இதனால் டாப் ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார் அவர். அதுமட்டுமின்றி ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

இடையில் சறுக்கல், மீண்ட திரிஷா: சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிரேம்குமார் இயக்கத்தில் 96 திரைப்படத்தில் ஜானு கேரக்டரை ஏற்றிருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி ரோல் எப்படி திரிஷாவுக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்ததோ அதேபோல் இந்த ரோலும் கொடுத்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க; மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் அவர்.

தொடர்ந்து பிஸி: 96 படத்துக்கு பிறகு பொன்னியின் செல்வன், லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; விஜய் நடித்திருந்த GOAT திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார். இப்படி நடிப்பு, நடனம் என பிஸியாக இருக்கிறார். சொல்லப்போனால் இப்போது கோலிவுட்டில் ஹீரோயின்கள் பஞ்சம் நிலவுவதாகவும்; அதனை திரிஷாதான் தீர்த்து வைக்கிறார் என்றும் பேச்சுக்கள் சத்தமாகவே கேட்க ஆரம்பித்துவிட்டன.

Trisha says to plan honeymoon as news of marriage spreads
Photo Credit:

நோ திருமணம்: திரிஷாவுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னமும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. முதலில் வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பதற்கு மாப்பிள்ளை வீட்டில் தடை போடப்பட்டதால் நிச்சயத்தார்த்தோடு அந்த உறவிலிருந்து வெளியே வந்தார். அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்தார். ஆனால் அந்தக் காதலும் பாதியிலே முடிவடைந்துவிட்டது.

அதில் நம்பிக்கை இல்லை: திரிஷாவுக்கு எப்போதுதான் திருமணம் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அவரிடமும் அதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்; திருமணத்துக்கு பிறகு விவாகரத்து செய்துகொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு பொருத்தமானவர் வரும்போது கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலைய்ல் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் என்று சில நாட்களாக தகவல் பரவிவருகிறது.

திரிஷாவின் பதிவு: அதுகுறித்து திரிஷாவின் தாய் உமா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்நிலையில் இந்தத் தகவல் குறித்து திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய தேனிலவையும் நீங்களே திட்டமிட்டு கொடுங்களேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X