»   »  பேய்ப் படத்துக்கு ஒப்பந்தம்: திருமண அறிவிக்குப் பின் த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

பேய்ப் படத்துக்கு ஒப்பந்தம்: திருமண அறிவிக்குப் பின் த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்புகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பிறகு த்ரிஷாவுக்கு ஏகப்பட்ட புதுப்பட வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழ் சினிமாவில் கடந்த 12 ஆண்டுகளாக முன்னணி நடிகையாகத் திகழ்பவர் த்ரிா. தெலுங்கிலும் அவர் முன்னணி நடிகைதான்.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் அவரது திருமணம் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஒருவழியாக தொழிலதிபரும் சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனை அவர் திருமணம் செய்யப் போவதை அறிவித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டது.

திருமணத்துக்குப் பிறகும் நடிக்கப் போவதாக த்ரிஷா அறிவித்துவிட்டார்.

புதுப் படங்கள்

புதுப் படங்கள்

இதனால் அவருக்கு அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகுதான் அவர் அப்பாடக்கர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்தப் படமும் முடியும் தறுவாயில் உள்ளது. ஏற்கெனவே இதே ஜெயம் ரவியுடன் அவர் நடித்த பூலோகம் படமும் திரைக்கு வரவிருக்கிறது.

தெலுங்கில்

தெலுங்கில்

ஜெய்க்கு ஜோடியாக இன்னொரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் லயன், போகி, ரம்பா ஊர்வசி மேனகா போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

பேய்ப் படம்

பேய்ப் படம்

இந்த நிலையில் தெலுங்கில் தனது மேனேஜராக உள்ள கிரிதருக்காக ஒரு பேய்ப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் த்ரிஷா. இந்தப் படத்தை கோவி இயக்குகிறார். தனது இந்தப் புதுப்படம் குறித்து ட்விட்டரிலும் அறிவித்துள்ளார் த்ரிஷா.

திருமணம் எப்போது...

திருமணம் எப்போது...

அடுத்தடுத்து புதுப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, இப்போதைக்கு திருமணத் தேதியை அறிவிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

English summary
Trisha seems to be one of the most busy actress in the industry. She is signing new movie in Tamil and Telugu, after her engagement with Varun Maniyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil