»   »  பன்றிக் காய்ச்சல்... தடுப்பூசி போட்டுக் கொண்ட த்ரிஷா

பன்றிக் காய்ச்சல்... தடுப்பூசி போட்டுக் கொண்ட த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகையான த்ரிஷா, பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு, அந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அப்பாடக்கர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இந்த படப்பிடிப்பின் போது பன்றி காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜெயம் ரவி-திரிஷா மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோர் முகத்தில் தடுப்பு துணி அணிந்தபடி படங்களை வெளியிட்டிருந்தனர்.

தடுப்பூசி

தடுப்பூசி

அடுத்து பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை த்ரிஷா போட்டுக் கொண்டார். அதைப் படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சலா?

பன்றிக் காய்ச்சலா?

இதனால் த்ரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா? என அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், த்ரிஷாவோ தனக்கு பன்றிக்காய்ச்சல் ஏதும் இல்லையென்றும், நலமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கைக்காக தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற நடிகர்களும்...

மற்ற நடிகர்களும்...

ஏற்கெனவே, பாலிவுட் நடிகை சோனம் கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்திலும் ஆங்காங்கே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வெளிப்பட்டு வருகிறது. இதனால் தமிழ் நடிகர் நடிகைகள் சத்தமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதை த்ரிஷா பகிரங்கப்படுத்திவிட்டார்.

English summary
Actress Trisha has vaccinated for Swine flue recently and released a photo in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil