»   »  என் உயிர் 'இப்படி' தான் போக வேண்டும்: த்ரிஷா உருக்கம்

என் உயிர் 'இப்படி' தான் போக வேண்டும்: த்ரிஷா உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட வேண்டும் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக இருந்து வருபவர் த்ரிஷா. நடுவில் மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தது. ஆனால் தற்போது அம்மணி கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

அவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த கொடி படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் த்ரிஷா தனது ஆசை ஒன்று குறித்து பேசியுள்ளார். த்ரிஷாவுக்கு நடிப்பு என்றால் உயிர் என்பது அனைவருக்கும் தெரியும்.

Trisha wants to leave this world while doing her one favourite thing

நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது உயிர் போக வேண்டும் என ஆசைப்படுகிறார் த்ரிஷா. தங்களுக்கு மிகவும் பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருக்கும்போதே உயிர் போக வேண்டும் என பலரும் விரும்புவது உண்டு. அதற்கு த்ரிஷா விதிவிலக்கு அல்ல.

தயாரிப்பாளர் வருண் மணியன் தன்னை தொடர்ந்து நடிக்க வேண்டாம் என்று கூறிய காரணத்திற்காக திருமணத்தையே நிறுத்தியவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Trisha wants to leave this world doing her favourite thing and that is nothing other than acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil