»   »  த்ரிஷா ஒருபோதும் பேயாக வந்து மிரட்ட மாட்டாராம்!

த்ரிஷா ஒருபோதும் பேயாக வந்து மிரட்ட மாட்டாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா ஒருபோதும் பேய் படத்தில் நடிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டாலும் அப்படியே உள்ளார். சில நடிகைகளுக்கு எடை அதிகரிக்கும், குறையும். ஆனால் த்ரிஷா தனது உடல் எடையை கச்சிதமாக வைத்துள்ளார்.

அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் முதல் பலதரபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பேய்

பேய்

த்ரிஷா நடிக்க வந்து 16 ஆண்டுகளாகிவிட்டது. அவர் சிம்ரனின் தோழியாக நடித்த ஜோடி படம் 1999ம் ஆண்டு ரிலீஸானது. அதை கணக்கில் வைத்து தான் 16 ஆண்டுகள் என்று தெரிவித்துள்ளோம். இத்தனை ஆண்டுகளில் அவர் ஒரு பேய் படத்தில் கூட நடித்தது இல்லை.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா, சார்மி, பிரியாமணி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் பேய் படத்தில் நடித்து வெற்றியும் கண்டுள்ளனர். ஆனால் த்ரிஷா மட்டும் பேய் படம் பக்கமே செல்லவில்லை.

பிடிக்காது

பிடிக்காது

த்ரிஷாவுக்கு பேய் படங்கள் பிடிக்காது. அதனால் தான் அவர் தன்னை தேடி வந்த பேய் பட வாய்ப்புகளை ஏற்கவில்லை. அவர் ஒருநாளும் பேய் படத்தில் நடிக்க மாட்டார் என்று த்ரிஷாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணா படம்

பாலகிருஷ்ணா படம்

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு த்ரிஷா பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்தும் வரும் லயன் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுவிட்டார். தற்போது மொய்னாபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கோலிவுட்

கோலிவுட்

கோலிவுட் ரசிகர்கள் அண்மை காலமாக பேய் படங்களை விரும்பி பார்க்கிறார்கள். இதனால் பேய் படங்கள் தொடர் வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் த்ரிஷாவுக்கு பேய் படங்களில் நடிக்க விருப்பமில்லை.

English summary
According to a source close to Trisha, the slim beauty will never act in a horror movie.
Please Wait while comments are loading...