»   »  திரிஷாவின் குரலாசை!

திரிஷாவின் குரலாசை!

Subscribe to Oneindia Tamil
Trisha
திரிஷா புது முடிவெடுத்துள்ளார். அது, இனிமேல் சொந்தக் குரலில்தான் வசனம் பேசி நடிக்கப் போகிறாராம்.

நல்ல அழகோடு, இனிய குரல் வளமும் படைத்தவர் திரிஷா. ஆனாலும் இதுவரை அவர் ஒரு படத்தில் கூட சொந்தக் குரலில் பேசியதில்லை. தமிழைக் கூட எப்போதாவதுதான் பேசுவார். வாயைத் திறந்தாலே ஏபிசிடிதான்.

இந்த நிலையில் இனிமேல் தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சொந்தக் குரலில்தான் பேசி நடிக்கப் போகிறாராம் திரிஷா. முதல் முறையாக அபியும், நானும் படத்திலிருந்து சொந்தக் குரலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறாராம்.

திரிஷாவின் இந்த முடிவுக்கு ஒரு பிரஸ்டிஜ் காரணமும் இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆசின், நயனதாரா ஆகியோரெல்லாம் சொந்தக் குரலில் பேசும்போது பச்சைத் தமிழச்சியான நாம் மட்டும் டப்பிங் குரலில் பேசுவது நியாயமில்லையே என்ற எண்ணம்தான் திரிஷாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாம்.

அபியும், நானும் படத்தைத் தொடர்ந்து தான் நடித்து வரும் பிற படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசப் போவதாக அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளாராம் திரிஷா.

இருந்தாலும் திரிஷாவை சொந்தக் குரலில் பேச விடுவதா, அல்லது வழக்கம் போல டப்பிங் ஆர்ட்டிஸ்டான சவீதாவையே பேச விடுவதா என்பது குறித்து இயக்குநர் ராதா மோகன் இன்னும் முடிவு செய்யவில்லையாம். இருந்தாலும் திரிஷாவையே அவர் டப்பிங் பேச வைக்கக் கூடும் என்று தெரிகிறது.

திரிஷாவின் சொந்தக் குரல் முடிவுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும், இரவல் குரலில் பேசியிருந்தால் விருது கிடைக்காது.


அபியும் நானும் படத்தில் தனது கேரக்டருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று திரிஷா எதிர்பார்ப்பதால்தான் சொந்தக் குரலில் பேச முடிவு செய்துள்ளதாக அந்த இன்னொரு தகவல் கூறுகிறது.

எப்படியோ, தனக்காக தானே பேசப் போகிறார் திரிஷா, அந்த வரைக்கும் சந்தோஷம்தானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil