»   »  திரிஷாவுக்கு கேரள மசாஜ்!

திரிஷாவுக்கு கேரள மசாஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது அழகை மேலும் எடுப்பாக்க கேரளத்து ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம் திரிஷா.

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. முன்பு ரஜினி கேரளாவுக்கு போய் அங்கு தங்கியிருந்து பஞ்சகர்மா ஆயுர்வதே சிகிச்சை மேற்கொண்டு புத்துணர்ச்சியுடன் திரும்பியதைத் தொடர்ந்து பலரையும் இந்த மசாஜ் கவர்ந்து விட்டது.

விக்ரமும் கேரளாவுக்குப் போய் மசாஜ் செய்து கொண்டு புது அழகுடன் திரும்பினார். இதையடுத்து பலரும் இப்போது கேரள மசாஜ் சென்டர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரிஷாவும் ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளாராம். நடிப்போடு அவ்வப்போது சர்ச்சையிலும் கலக்கி வருபவர் திரிஷா.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் குண்டக்க மண்டக்க டான்ஸ், இன்டர்நெட்டில் வீடியோ என சகட்டு மேனிக்கு பல சர்ச்சைகளில் சிக்கினார் திரிஷா.

லேட்டஸ்டாக ஹோட்டல் பாரில் ஒரு காவல்துறை அதிகாரியின் மனைவியிடம் பளார் பளார் என கன்னத்தில் அறை வாங்கிய பரபரப்பிலும் சிக்கினார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என படப்பிடிப்பில் பிசியாக இருப்பதாலும், ஹோட்டல் களியாட்டத்தாலும், திரிஷாவின் எழில் குறைந்து விட்டதாக பலரும் அபிப்பிராயம் சொன்னார்களாம். இதனால் பஞ்சகர்மா ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்ள தீர்மானித்துள்ளாராம் திரிஷா.

அப்படியா என்று திரிஷாவின் அம்மாவிடம் கேட்டால், அட திரிஷாவுக்கு நடிக்கவே நேரம் போதலை. இதில் மசாஜ் எடுக்க எங்கு நேரம் கிடைக்கும். அதெல்லாம் சும்மா வதந்தி. எனது மகளிடம் உள்ள அழகு அப்படியேதான் உள்ளது.

மசாஜ் செய்துதான் அழகை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. திரிஷாவைப் பிடிக்காதவர்கள் கிளப்பி விடும் வதந்தி இது என்றார் திரிஷாவின் அம்மா உமா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil