»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil
தனது கட் அவுட்டுக்கோ, படத்திற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றுதென்னிந்தியாவின் கனவு தேவதை
த்ரிஷா தனது ரசிகைகளுககு அன்பு கட்டளை இட்டுள்ளார்.
தமிழ் நடிகர்களுக்கு குண்டக்க மண்டக்க ரசிகர் மன்றங்கள் இருப்பது போலநடிகைகளுக்கு இருப்பதில்லை. முதல்முதலாக குஷ்புவுக்கு ரசிகர் மன்றங்கள்தோன்றி, கோவில் கட்டும் அளவுக்கு முத்திப் போனார்கள்.
அவருக்கு அடுத்து ரசிகை மன்றம் தொடங்கப்பட்ட நடிகை த்ரிஷாதான். சமீபத்தில்சென்னையில் த்ரிஷாவுக்கு அவரது ரசிகைகள் (ரசிகர்கள் அல்ல) கூடி மன்றம்ஆரம்பித்தனர்.
வடபழனி பகுதியில் பஸ் நிறுத்தத்தில் த்ரிஷாவின் பேனர், கட் அவுட்களை கட்டிகூடவே பாலாபிஷேகமும் செய்து ஆம்பளைகளுக்கு தாங்கள் கொஞ்சம்சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தனர்.
த்ரிஷா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது சென்னையில் சலசலப்பைஏற்படுத்தினாலும் த்ரிஷாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. உடனடியாக தனதுரசிகை மன்ற நிர்வாகிகளைக் கூப்பிட்டு மன்றம் ஆரம்பித்ததற்காக பாராட்டுதெரிவித்தாராம்.
இப்படியே நின்று விடாதீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களை, குறிப்பாக பெண்கள்,குழந்தைகளுக்காக பாடுபடுங்கள் என்றும் ஐடியா கொடுத்தாராம்.
அத்தோடு ஒரு அன்பு வேண்டுகோளும் விடுத்தாராம். என் கட் அவுட், படத்திற்குபாலாபிஷேகம் செய்வதைத் தவிருங்கள். அது சுத்த வேஸ்ட், பாலை வீணாக்காதீர்கள்.அந்த காசை யாருக்காவது கொடுத்து உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்த்ரிஷா.
ணா
மேலும் தனது ரசிகை மன்றத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் ஆர்வமாகஉள்ளாராம் த்ரிஷா.
அதே நேரத்தில் ரசிகை மன்றப் பணிகளுக்காக பண உதவி செய்யும் எண்ணம் ஏதும்த்ரிஷாவிடம் இல்லையாம். இருந்தாலும் சமூக சேவை நோக்கில் தனது ரசிகைமன்றங்கள் செயல்பட்டால் அதற்கு உதவத் தயாராக இருக்கிறாராம்.
ஒரு கும்மா மேட்டர்:
த்ரிஷா பற்றி பேச வரும்போது அவரது அம்மா குறித்தும் பேசியாக வேண்டியுள்ளது.த்ரிஷாவின் அம்மா உமாதான், நடிகைகளின் தாய்க்குலங்களிலேயே படு யங்கானலுக்குடன் இருப்பவர் என்பது கோலிவுட்டின் கருத்து.
உமாவைத் தேடி தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் இதுவரை அவர் ஒத்துக்கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் இப்போது மகள் த்ரிஷா நடிக்கும் தெலுங்குப் படத்தில் த்ரிஷாவின்அம்மாவாகவே நடிக்கிறாராம் உமா. அவரது இளமைக்குக் காரணம், தினமும்ஜிம்முக்குப் போவது தானாம்.
Please Wait while comments are loading...