»   »  திரிஷா மனதில் 'நெமோ'!

திரிஷா மனதில் 'நெமோ'!

Subscribe to Oneindia Tamil
Trisha
'ரெமோ'க்கள் மனதில் இடம் பிடித்துள்ள திரிஷாவின் மனதில் இடம் பிடித்திருப்பது யார் தெரியுமா? 'நெமோ'!

பிரபலமான 'பைன்டிங் நெமோ' (Finding Nemo) என்ற வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படத்தில் இடம் பெற்ற கேரக்டர்தான் 'நெமோ'.

இது ஒரு மீனின் பெயர். இந்த மீனின் உருவத்தைத்தான் தனது மார்பில் டட்டூவாக பதித்துள்ளார் திரிஷா.

2003ம் ஆண்டு வெளியான வால்ட் டிஸ்னியின் பிரபலமான அனிமேஷன் படம் பைன்டிங் 'நெமோ'. மீன்கள் குறித்த இந்தப் படத்தில் இடம் பெற்ற கேரக்டர்தான் 'நெமோ'.

மார்லின் என்ற மீனின் குழந்தைதான் (குஞ்சு) இந்த 'நெமோ'. ஒரு பெரிய தாக்குதலில் மார்லினின் குடும்பம் பிரிந்து விடுகிறது. நெமோ மட்டும்தான் மார்லினுடன் மிஞ்சுகிறது. தனது மகன் மீது மிகுந்த பிரியத்துடன் இருக்கிறது மார்லின்.

ஒருமுறை கடலில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால், எங்கும் போகாதே என்று மார்லின், 'நெமோ'வுக்கு அறிவுறுத்துகிறது. ஆனால் அதைக் கேட்காமல் 'நெமோ' செல்ல, ஒரு ஸ்கூபா டைவரின் படகில் போய் மாட்டிக் கொள்கிறது.

அந்த ஸ்கூபா டைவர், 'நெமோ'வைப் பிடித்துச் செல்கிறார். சிட்னியில் உள்ள ஒரு பல் மருத்துவமனையின் மீன் தொட்டியில் 'நெமோ' விடப்படுகிறது.

காணாமல் போய் விட்ட 'நெமோ'வைத் தேடி மார்லினும், அவனது தோழன் டோரியும் சேர்ந்து கடல் முழுவதும் அலைகின்றனர்.

அதேசமயம் மீன் தொட்டியில் அடைபட்ட 'நெமோ', தந்தையைப் பிரிந்த வருத்தத்தில் உழல்கிறது. அப்போது தொட்டியில் உள்ள பிற மீன்கள், 'நெமோ'வுக்கு ஆறுதல் கூறுகின்றன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆகின்றனர்.

அத்தோடு நில்லாமல், தொட்டியிலிருந்து தப்பித்து மீண்டும் கடலுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை இந்த அனிமேஷன் படத்தில் படு அழகாக காட்டியிருப்பார்கள்.

கட்!. ஆஸ்கர் விருது பெற்ற இந்த 'நெமோ' கேரக்டர் இப்போது திரிஷாவின் மனதில் இடம் பிடித்துள்ளது. அதாவது தனது இடது மார்பில் 'நெமோ' மீனை டட்டூவாக இடம் பெற வைத்துள்ளார் திரிஷா.

நுங்கம்பாக்கத்தில் உள்ள இரிசுமி என்ற இடத்தில்தான் இந்த டட்டூ பதிக்கும் வேலையைச் செய்தாராம் திரிஷா.

பச்சை இருக்கட்டும், பீமா எப்படி? என்று கேட்டாலே சந்தோஷமாகி விடுகிறார் திரிஷா. ஷாலினி என்ற கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ளார் திரிஷா.

படம் முழுக்க நான் புது தோற்றத்தில் வருகிறேன். ரசிகர்களுக்கு அது பிடிக்கிறதோ இல்லையோ எனக்கே என்னை ரொம்பப் பிடித்துப் போய் விட்டது. அப்படி ஒரு அட்டகாசமான கேரக்டர் என்கிறார் புன்னகையுடன்.

சாமி படத்திற்குப் பிறகு நானும், விக்ரமும் இணைந்துள்ள படம். நன்றாக வந்திருக்கிறது. அதேசமயம் படத்தில் பெரிய அளவில் கிளாமரோ அல்லது காமெடியோ கிடையாது. ஆனால் நானும் விக்ரமும் வரும் காட்சிகளில் இந்த இரண்டுமே சரி விகத்தில் கலந்திருக்கும் என்றார் திரிஷா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil