»   »  எக்ஸ்க்யூஸ்மி மீம்ஸ் கிரியேட்டர்ஸ்: ஸ்ருதியிடம் உங்க பப்பு வேகலை

எக்ஸ்க்யூஸ்மி மீம்ஸ் கிரியேட்டர்ஸ்: ஸ்ருதியிடம் உங்க பப்பு வேகலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சமூக வலைதளங்களில் தன்னை யார் கிண்டல் செய்தாலும் தனக்கு கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

ஸ்ருதி ஹாஸன் நடித்த பெஹன் ஹோகி தேரி இந்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்ப்பவர்கள் படம் நன்றாக உள்ளதாகவும், ஸ்ருதியின் நடிப்பு அருமை என்றும் பாராட்டி வருகிறார்கள்.

பெஹன் ஹோகி தேரி படத்தால் ஸ்ருதி மகிழ்ச்சியில் உள்ளார்.

மீம்ஸ்

மீம்ஸ்

ஸ்ருதி ஹாஸன் என்றாலே மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிடுகிறார்கள். ஸ்ருதியின் லுக், அவரின் குரலை கிண்டல் செய்து மீம்ஸ் போடுகிறார்கள். மேலும் சிலர் ஸ்ருதியை கலாய்த்து ட்வீட் போடுகிறார்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்வது பற்றி ஸ்ருதி பேசியுள்ளார். யார் கிண்டல் செய்வதாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. இது சமூக வலைதளம் மட்டும் இல்லை இது தான் மக்களின் வாழ்க்கை, எண்ணத்தை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன் என்கிறார் ஸ்ருதி.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

அடுத்தவர்களை பற்றி ஏதாவது முடிவுக்கு வருவது அல்லது கிண்டல் செய்வது அல்லது தாக்கிப் பேசுவது சரி என்று மக்கள் நினைக்கிறார்கள். நேரில் செய்ய முடியாததை செய்ய சமூக வலைதளம் தைரியம் அளிக்கிறது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

பாதிப்பு

அடுத்தவர்களின் கருத்துகள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. அதனால் சமூக வலைதளங்களில் கலாய்ப்பது என்னை பாதிக்கவில்லை. அடுத்தவர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொண்டால் யாரும் நம் வேலையையும் செய்ய முடியாது, வீட்டை விட்டு வெளியே வரவும் முடியாது என்று ஸ்ருதி கூறியுள்ளார்.

English summary
Actress Shruti Haasan is super cool when it comes to trolling. She says trolling on social media doesn't affect her in any way.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil