»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கனவு நீதானடி என்ற படத்தில் பெங்களூரைச் சேர்ந்த மாடல் துஷா பாண்டே ஹீரோயினாகஅறிமுகமாகவுள்ளார்.

கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அவளு நன்ன கெலதி உள்பட பல படங்களில்நடித்திருக்கும் துஷாவுக்கு கனவெல்லாம் தமிழில் முன்னணிக்கு வர வேண்டும் என்பது தானாம்.

இப்போது கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதோடு, மும்பைக்கும் பறந்துகொண்டிருக்கும் துஷா மாடலங்கிலும் படு பிஸி.

கன்னடம், தெலுங்கில் பல படங்களை எடுத்துள்ள டி.சி. சத்யநாராயணனின் முதல் தமிழ் தயாரிப்புஇது. ஏற்கனவே தமிழுக்கு பல டப்பிங் படங்களைக் கொண்டு வந்திருக்கும் சத்யநாராயணன்தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது தான்.

கனவு நீதானடி படத்தை இயக்கப் போவது சோழன்.

விஜய்காந்தின் பல படங்களில்அசோசியேட்டாகப் பணியாற்றியுள்ள சோழன் இயக்கும் இரண்டாவது படம் இது.

தமிழரான இவர் கன்னடத்தில் வெற்றிப் படத்தைக் கொடுத்த கையோடு கனவு நீதானடியைஇயக்குகிறார்.

இதில் எம்.பி.ஏ. பட்டதாரியான கண்ணன் அறிமுகமாகிறார். பாடி பில்டரான கண்ணன், மிஸ்டர்விருதுநகர் பட்டம் பெற்றவர்.

கராத்தே உள்பட பல தற்காப்புக் கலைகளிலும் குதிரையேற்றதிலும்கில்லாடி.

படத்துக்கான பாடல்கள் ரெடியாகிவிட்டன. மிக அட்டகாசமான வரிகளால் கலக்கி இருக்கிறார்பாடலாசிரியர் ஸ்னேகன். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப் போகிறது. சென்னை,அருப்புக்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கப் போகிறது. பாடல் காட்சிகளுக்கு கனடா,லண்டனுக்குப் பறக்கவும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil