»   »  கல்யாணம் முடிந்த 2 நாளிலேயே ஷூட்டிங் போவேன்... 'பருத்திவீரன்' நாயகி பளீச்!

கல்யாணம் முடிந்த 2 நாளிலேயே ஷூட்டிங் போவேன்... 'பருத்திவீரன்' நாயகி பளீச்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திருமணம் முடிந்த 2வது நாளிலேயே படப்பிடிப்புக்குப் போய் விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியா மணி.

'பருத்திவீரன்', 'மலைக்கோட்டை' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ப்ரியாமணி. தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவரும் இவர் நீண்ட நாட்களாக தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

தமிழில் கடைசியாக ஒட்டிப் பிறந்த இரட்டையராக 'சாருலதா' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

23ம் தேதி திருமணம்

23ம் தேதி திருமணம்

இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதியன்று எளிமையான முறையில் நடக்கவுள்ளதாம். அதைத் தொடர்ந்து 24-ம் தேதி பெங்களூருவில் திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது. இதில் கலந்துக்கொள்ள தென்னிந்தியாவின் சில திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.

விவேகமான முடிவு

விவேகமான முடிவு

'இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருடைய மத நம்பிக்கைகளையும் காயப்படுத்தாமல், பதிவுத் திருமணம் செய்ய இருக்கிறோம். இதுதான் விவேகமான முடிவு என இருவருமே தீர்மானித்திருக்கிறோம்' என ப்ரியாமணி தெரிவித்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகும்

திருமணத்திற்குப் பிறகும்

'திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா எனும் கேள்விக்கு, 'நான் எனது வேலையைத் தொடர்ந்து ய்வேன். திருமணம், வரவேற்பு முடிந்த இரண்டு நாட்களிலேயே ஷூட்டிங்குக்குப் போகவேண்டியிருக்கிறது.

தொடர்ந்து நடிப்பேன்

தொடர்ந்து நடிப்பேன்

அதற்கு அப்புறமும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார் ப்ரியா மணி. பிரமாதம்தான் போங்க!

English summary
Two days after my wedding i will get back to work says priyamani. She is getting married on Aug 23.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil