»   »  ஏக்கம் தீர்ந்த உமா

ஏக்கம் தீர்ந்த உமா

Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் வாய்ப்புகள் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த உமாவின் கையில் இப்போது கையில் 8 படங்கள். படு பிஸியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.

மாறுவேடத்தில் மகாலட்சுமி வந்தால் இப்படி இருப்பார் என்று சொல்லும்படியான அழகுடன் அறிமுகமானவர் நடிகை சுமித்ராவின் மகள்உமா. அவரது முகவெட்டிற்கு ஏற்றமாதிரி குடும்பப் பாங்கான வேடங்களே தொடர்ந்து கிடைத்தன.

அவை எதுவும் சரியாக ஒடாததால் வாய்ப்புகள் இன்றி வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது என்னடாவென்றால் கைநிறைய படங்களை வைத்துக் கொண்டு, எந்தப் படத்திற்கும் இடைஞ்சல் வராமல் எப்படி கால்ஷீட் கொடுப்பது என்று திணறிக்கொண்டுஇருக்கிறார்.

அடைக்கலம் படத்தில் பிரஷாந்திற்கு தங்கை, மணிகண்டா படத்தில் அர்ஜூனுக்கு ஜோடி, அமுதே படத்தில் ஜெய் ஆகாசுக்கு ஜோடி,ரைட்டா தப்பா படத்தில் புதுமுகம் ரமணாவுக்கு ஜோடி,

மச்சாயி, நகுலன் ஆகிய படங்களில் புதுமுகங்களுக்கு ஜோடி, உப்பிதாதா எம்.பி.பி.எஸ் (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் கன்னடவெர்ஷன்) படத்தில் உபேந்திராவுக்கு ஜோடி என உமாவின் கால்ஷீட் புக்கில் அடைமழை.


உமா பிஸியாக இருப்பதில் அவரை விட அவரது அம்மா சுமித்ராவிற்கே அதிக சந்தோஷம். அவரை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாகஉமாவிற்கு புதிதாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் அகத்தியன் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் வேடந்தாங்கல் படத்தில் நடிக்க உமா ஒப்பந்தமாகியிருக்கிறார். அகத்தியன்இயக்கத்தில் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்ட வந்த ராமகிருஷ்ணா படம் அண்மையில் வெளியானது.

இதனையடுத்து வேடந்தாங்கல் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, கலைவாணி மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில்தானே இந்தப் படத்தை அகத்தியன் தயாரிக்கிறார்.

கதாநாயகனாக புன்னகைப் பூவே நந்தா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உமா மற்றும் ராமகிருஷ்ணா படத்தில் நடித்த வாணி ஆகியோர்நடிக்கிறார்கள். படத்தில் தேவயானிக்கு ஒரு முக்கிய பாத்திரம் உள்ளது.

அகத்தியனின் பாடல்களுக்கு தேவா இசையமைக்கிறார். இயக்குணராகி விட்ட ஒளி ஓவியர் தங்கர்பச்சான் இந்தப் படத்திற்கு மீண்டும்ஒளிப்பதிவு செய்ய இசைந்துள்ளார்.

அகத்தியன் படம் என்பதால் நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உமாவும், சுமித்ராவும் இருக்கிறார்கள். இதற்கிடையேஉமாவின் தங்கை தீபுவிற்கும் வாய்ப்புகள் வருவதால், அவரையும் விரைவில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளார்கள். (ஏற்கனவே தீபு என்றபெயரில் ஒருவர் நடிக்கிறார். அவர் வேறு.. இவர் வேறு).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil